Home Blog Page 1947

விக்கிவந்தால் கூட்டமைப்பு பலமாக திகழும்!! செல்வம் எம்பி!!

கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணைய தயார் என்று முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து என்னை பொறுத்த வரை நல்லவிடயமாக படுகிறது. அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு திகழும். என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற டெலோவின் தலைமை குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி எமது கட்சியின் 50 வது ஆண்டு விழாவை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அன்றயதினம் கட்சியின் செயலாளர் நாயகத்தை தெரிவிசெய்யும் முடிவையும் பாராளுமன்ற தேர்தலிற்கான தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளர்கள் யார் என்பதையும் நாம் தெரிவிக்க இருக்கிறோம்.
எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை நாம் மீள அழைக்கப்போவதில்லை. அவர்களிற்கு எமது கட்சியில் இடமில்லை.

கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணைய தயார் என்று முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து என்னை பொறுத்த வரை நல்லவிடயமாக படுகிறது. இதனை தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் பேசி அப்பிடி ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை செய்யலாமே தவிர இது ஒரு சாத்தியமான விடயம் என நான் கூறமுடியாது.நாம் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் வடகிழக்கிலே அதிக ஆசனங்களை பெற்று எமது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆணையை வலுவாக பெற்றிருக்கமுடியும். எனவே அவரும் வெறும் பேச்சிலே கருத்துக்களை சொல்லக்கூடாது.

ஆனால் எமது மக்களின் இனப்பிரச்சனை தீர்கப்படவேண்டும் என்று வாயளவிலே சொல்லுகின்ற யாருமே எமது மக்களின் பிரச்சினையை தீர்க்கமுடியாது. ஆகவே உளரீதியாக சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் இந்த விடயத்திலே ஒற்றுமை கொள்ளகூடிய வாய்ப்பை உருவாக்கவேண்டும். அவருடை கூற்றினை நாம் சிந்திக்கவேண்டும். அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு திகழும். அந்த முயற்சியை டெலொ செய்யும்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகிறது. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையில் கூட சிங்கள மக்களின் ஜனாதிபதியாக தான் அவர் தனது கருத்துக்களை சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை. எனவே நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இப்படியான விடயங்களை கண்டிக்க வேண்டும். தமிழ் முஸ்லீம் மலையக மக்களை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் என்ற அழுத்த்தை அவர்களிற்கு கொடுக்கவேண்டும். அடம்பிடிப்பது விடாப்பிடியாக செயற்படுவது அவர்களிற்கு நட்டத்தையே கொடுக்கும். எனவே ஜநா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் வரவிருக்கும் ஜநா அமர்வில் கூட்டமைப்பு சார்பாக களம் இறங்க தாயாராக இருக்குறோம்.என்றார்.

தமிழர்களிற்கு வெளிநாடே ஒரே தீர்வு!

வெளிநாடுகளை அழைப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வினை பெற்றுக்கொள்ளமுடியும் என்று வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்….

ஜனாதிபதி காணாமல் போனவர்கள் இல்லை என்று கூறிய கருத்துக்கு நாம் கண்டனத்தை தெரிவித்துகொள்கின்றோம். காணாமல் போனவர்கள் இல்லை என்று சொல்வது நாம் எதிர்பார்த்தது தான். தமிழ் மக்களின் வாக்குகளுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொன்னது.சிங்கள மக்களின் ஆதரவுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொல்லியிருக்கிறது.
வெளிநாடுகள் மூலமே தீர்வினை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதை இவர்கள் மீண்டும்உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

அண்மையில் பல்கலைகழக மாணவர்களால் பொங்கு தமிழ் நிகழ்வு நாடாத்தப்பட்டிருந்தது.அந்த நிகழ்வை எதிர்வரும் காலம் பெருமளவில் செய்வதாக கூறியிருக்கிறார்கள். அதனை விட நாம் தமிழ்மக்களிற்கான தீர்வை எப்படி பெறப்போகின்றோம்.என்ன வழியில் பெறப்போகின்றோம் என்பதை தான் இந்த அரசியல் தலைமைகள் மற்றும் கலவிசமூகமும் கூற வேண்டிய தேவை தமிழ் மக்களிற்கு இருக்கிறது. எனவே நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை அழைப்பதன் ஊடாக தான் தமிழருகான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளலாம். என்றனர்.

ஐ.நா தீர்மானம் உலக நாடுகளை ஏமாற்ற சிறீலங்கா திட்டம்?

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா விவகாரங்கள் விவாதிக்கப்படுவதையோ அல்லது சிறீலங்கா மீது மேலதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதையோ தடுக்கும் முயற்சிகளை சிறீலங்கா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த வாரம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியப் பிராந்தியத்திற்கான செயலாளர் அலிஸ் வெல்ஸ் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானம் குறித்து பேசியது ஒருபுறம் இருக்க, பொதுநலவாய நாடுகளின் தென்னாசியா பிராந்திய பணிப்பாளர் கெரத் பெய்லி இந்த வாரம் சிறீலங்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனாவைச் சந்தித்த அவர் ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டிருந்தார். கெரத்துடன் சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதுவர் சாரா கட்டனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

ஆனால் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை சிறீலங்கா நாடாளுமன்றம் அங்கீகரிக்கவில்லை என அமெரிக்க மற்றும் பிரித்தானியா அதிகாரிகளுக்கு தெரிவித்த சிறீலங்கா அதிகாரிகள், தாம் தமிழ் மக்களுடன் நல்லிணக்கப்பாடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

யாழ்மாவட்டத்தின் முன்னார் அரச அதிபர் திருமதி பி. எம் சார்ள்ஸ் அவர்களை ஆளுநராக நியமித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவரிடம் அதிகாரங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் பல இடங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், வடமாகணசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் எனவும், அதன் கால தாமதத்திற்கு முன்னைய அரசே பொறுப்பு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஐ.நா தீர்மானத்தை முற்று முழுதாக எதிர்க்காது, அதில் உள்ள சில சரத்துக்களை மாற்றும் முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருவதாகவும், அதில் சிறீலங்கா படையினர் மீதான விசாரணைகளை நீக்கும் திட்டங்களும் உண்டு எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்காவில் ஏப்பிரலில் பொதுத்தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் நாள் சிறீலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும், ஏப்பிரல் மாதம் மூன்றாவது வாரம் அங்கு பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் சிறீலங்கா அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மிகப்பெரும் பிளவைச் சந்தித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி இந்த தேர்தலில் மிகப்பெரும் பின்னடைவைச் சந்திக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம், சிறீலங்கா சுதந்திரக் கட்சி தாமரை மொட்டுச் சின்னததில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, தமிழ் கட்சிகள் சிறிய கூட்டணிகளாக போட்டியிடும் சாத்தியங்களே தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க இரண்டாக பிளவு – புதிய கூட்டணி அமைக்க திட்டம்?

சிறீலங்காவின் மிகவும் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கட்சி தலைமைப் பொறுப்பு தொடர்பில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாகவே கட்சி இரண்டாக உடைந்துள்ளது. சஜித் பிரேமதாசா தலைமையில் ஒரு குழுவினரும், ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் மற்றும் ஒரு குழுவினரும் பிரிந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற நாடாளுமன்றக்குழு கூட்டத்தின் போது இரு தரப்பினரும் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தைப் பிரயோகங்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதாசா தலைமையிலான குழுவினர் புதிய பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

மூன்று வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகள் ஒன்றாக சிறீலங்காவில் – சீனாவிடம் உதவிகோர சிறீலங்கா திட்டம்?

உலகின் மூன்று முக்கிய வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகள் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவை ஒரே நாளில் தனித்தனியாக சந்தித்தது சிறீலங்காவை மையம் கொண்டுள்ள பூகோள அரசியல் தொடர்பான கணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (14) அமெரிக்காவின் மத்திய மற்றும் தென் ஆசியப் பிராந்தியத்திற்கான செயலாளர் அலிஸ் வெல்ஸ், சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி மற்றும் ரஸ்யா வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லெவ்ரோவ் ஆகியோர் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயாவை தனித்தனியாக ஒரே நாளில் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின் போது சிறீலங்காவின் பிரதமரும், கோத்தபாயாவின் சகோதரருமான மகிந்தா ராஜபக்சா, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா ஆகியோரும் உடன் இருந்தனர்.

பொருளாதார மற்றும் பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்தே இந்த மூன்று அதிகாரிகளும் பேசியுள்ளனர்.

அலிஸ் வெல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் எழுதிய கடிதத்தை கோத்தபாயாவிடம் கையளித்துள்ளார்.

சிறீலங்காவுடன் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள உறவுகள் மற்றும் உதவிகள் தொடர்பான நிபந்தனைகள் அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

allice மூன்று வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகள் ஒன்றாக சிறீலங்காவில் - சீனாவிடம் உதவிகோர சிறீலங்கா திட்டம்?பொருளாதார அபிவிருத்தி, பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு, படைத்துறை உடன்பாடுகள், மிலேனியம் சலஞ் உடன்பாட்டு நிதி விவகாரம் போன்ற விடயங்கள் உள்ளடங்கியுள்ள கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அலிஸ் மிலேனியம் சலஞ் உடன்பாடு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக கோத்தபாயா அமைக்கும் குழுவை தாம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவான பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்காவுக்கான பயணத்தை நிறைவு செய்து வெளி-யேறும் போது வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசுடன் மேற்கொள்ளப்படவுள்ள படைத்துறை மற்றும் பொருளாதார உடன்பாடுகள் குறித்து பேசவில்லை. அவை தொடர்பில் பொதுத்தேர்தல் நிறைவுபெற்றதும் கலந்துரையாடப்படும்.

சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததும், இந்த உடன்பாடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் தொடர்பில் ஆய்வு செய்வோம். படைத்துறை ஒப்பந்தம் 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, 18 அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் பயணம் என்பதே அதன் வெற்றி தான்.

image fb11f81bdf மூன்று வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகள் ஒன்றாக சிறீலங்காவில் - சீனாவிடம் உதவிகோர சிறீலங்கா திட்டம்?ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் விரிவான பேச்சுக்களை மேற்கொண்டிருந்தேன். காணிகள் விடுவிப்பு, காணாமல்போனவர்களுக்கான நீதி தொடர்பில் ஆராயப்பட்டது.

சிறீலங்கா எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேண வேண்டும். பல நாடுகளைப்போலவே சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுகளின் முதலீடுகள் தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் பொது அமைப்புக்கள் மற்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு ஐ.நா தீர்மானத்தின் பின்னனியில் அமெரிக்க இருந்தபோதும் தற்போது அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் உறுப்பினராக இல்லை.

ஆனால் சிறீலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார்.

கோத்தபாயாவுக்கு சீன அரசின் வாழ்த்துக்களைத் தெரித்த அவர், சிறீலங்காவின் பொருளாதார அபிவிருத்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்த சீனா உதவும் என்பதுடன், சிறீலங்காவின் ஒருமைப்பாட்டையும்;, சுதந்திரத்தையும் சீனா காப்பாற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமக்கு சீனாவிடம் இருந்து அதிக பொருளாதார உதவி தேவை என மகிந்த சீனா அமைச்சரிடம் கேட்டதுடன், பொருளாதார உதவிகளை வழங்கும் வல்லமை சீனாவுக்கே உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ள ரஸ்யாவின் அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா தமக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் சிறீலங்காவுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வினியோகம் செய்யவும் ரஸ்யா விரும்புவதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, பிரேசில், தென்னாபிரிக்கா மற்றும் ரஸ்யாவைக் கொண்ட பி.ஆர்.ஐ.சி.எஸ் எனப்படும் ஐந்து முக்கிய பொருளாதார நாடுகளின் கூட்டணியில் ரஸ்யா முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிறீலங்காவின் பூகோள பிராந்தி முக்கியத்துவத்தினால் தாம் மிகப்பெரும் அரசியல் அழுத்தங்களைச் சந்தித்துவருவதாக கோத்தபாயா சீனா அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.

சிறீலங்காவின் கேந்திர முக்கியத்துவமே இந்த சந்திப்புக்களின் பின்னனி, உலகின் மிகவும் முக்கிய வழங்கல் பாதையாக கருதப்படும் இந்து வமுத்திரப் பிராந்தியம் சிறீலங்காவில் இருந்து 12 கடல் மைல்கள் தொலைவில் தான் உள்ளது. உலகின் 72 சதவிகித எரிபொருள் வினியோகம் இந்த பாதையால் தான் செல்கின்றது. 50 விகித கொள்கலன்களும் இந்த வழியால் தான் செல்கின்றன. அதுவே தற்போது சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு காரணம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

சிங்களே, ராவணா பலய அமைப்புகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு விஜயம்!

சிங்களே மற்றும் ராவணா பலய என்ற பௌத்த அமைப்புகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் இன்று முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தனர் .

பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரிகள், ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் சிங்களே அமைப்பை சேர்ந்த பிக்குகள் அடங்கிய குழுவினர் இரவு 7 மணியளவில் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது, ஆலயம் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டதோடு பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை சேர்ந்த அமைப்பினருடனும் கலந்துரையாடினர்.

மேலும் பௌத்த விகாரை அமைக்கப்படுள்ள பகுதிக்கு எதிரே உள்ள இராணுவ முகாமுக்குள் நீராவியடி பகுதியில் அமைந்துள்ள குறித்த குருகந்தே ரஜமகா விகாரையின் தொன்மையை சொல்லும் தொல்பொருள் சிதைவுகள் இராணுவத்தினரால் அருங்காட்சியகமாக வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கும் சென்று பார்வையிட்டனர்.

கொழும்பில் இருக்கும் பௌத்த பிக்குகளை விட வடக்கு கிழக்கில் வசிக்கும் பிக்குகள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும், தமிழ் இனவாதிகளால் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும், அந்த நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கோடும், அவர்களுக்குரிய பாதுகாப்பை ஏற்படுத்தி பௌத்த மதத்தை வளர்க்கும் நோக்கோடும் தாம் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாக ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.<

தொடர்மழையால் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி விவசாயிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் அறுவடை செய்த நெல்லை உலர விடுவதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுவருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கை தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலை இன்மை, நோய்த்தாக்கம் என்பவற்றால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

மழை காரணமாக அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாமலும் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதுடன், சில வயல் நிலங்களில் வெள்ள நீர் வடிந்தோட முடியாது நெற் கதிர்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதனால் அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகளிடமிருந்து தனியார், நாளுக்கு நாள் குறைந்த விலைகளில் கொள்வனவு செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் முதல் 75 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மூடை சிகப்பு நெல் 3400 ரூபாவிற்கும், வெள்ளை நெல் 3600 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டு வந்தது.

தற்போது 75 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மூடை சிகப்பு நெல் 2700 ரூபாவிற்கும், வெள்ளை நெல் 2500 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் நெல்லின் விலை மேலும் குறைவடையும் போது தாங்கள் மேலும் நட்டத்தை எதிர்கொள்ளும் நிலையே காணப்படுகின்றது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே கடந்த ஆண்டுகள் போல் விவசாயிகளிடமிருந்து உரிய விலைகளில் நெல்லை கொள்வனவு செய்வதற்கும் நெல்லுக்கான உத்தரவாத நிலையினை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலநிலை தொடர்பில் இன்று வெளியாகியுள்ள முன்னறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் நாளையிலிருந்து (ஜனவரி 20ம் திகதி) மழையுடனான காலநிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிக்கு – தென்னிலங்கையில் நடந்த சம்பவம்

அம்பாந்தோட்டை – ஹங்கம பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பௌத்த துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதன் போது நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்த பௌத்த துறவி மீது துப்பாக்கி சூடுபட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.