மூன்று வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகள் ஒன்றாக சிறீலங்காவில் – சீனாவிடம் உதவிகோர சிறீலங்கா திட்டம்?

உலகின் மூன்று முக்கிய வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகள் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவை ஒரே நாளில் தனித்தனியாக சந்தித்தது சிறீலங்காவை மையம் கொண்டுள்ள பூகோள அரசியல் தொடர்பான கணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (14) அமெரிக்காவின் மத்திய மற்றும் தென் ஆசியப் பிராந்தியத்திற்கான செயலாளர் அலிஸ் வெல்ஸ், சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி மற்றும் ரஸ்யா வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லெவ்ரோவ் ஆகியோர் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயாவை தனித்தனியாக ஒரே நாளில் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின் போது சிறீலங்காவின் பிரதமரும், கோத்தபாயாவின் சகோதரருமான மகிந்தா ராஜபக்சா, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா ஆகியோரும் உடன் இருந்தனர்.

பொருளாதார மற்றும் பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்தே இந்த மூன்று அதிகாரிகளும் பேசியுள்ளனர்.

அலிஸ் வெல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் எழுதிய கடிதத்தை கோத்தபாயாவிடம் கையளித்துள்ளார்.

சிறீலங்காவுடன் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள உறவுகள் மற்றும் உதவிகள் தொடர்பான நிபந்தனைகள் அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

allice மூன்று வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகள் ஒன்றாக சிறீலங்காவில் - சீனாவிடம் உதவிகோர சிறீலங்கா திட்டம்?பொருளாதார அபிவிருத்தி, பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு, படைத்துறை உடன்பாடுகள், மிலேனியம் சலஞ் உடன்பாட்டு நிதி விவகாரம் போன்ற விடயங்கள் உள்ளடங்கியுள்ள கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அலிஸ் மிலேனியம் சலஞ் உடன்பாடு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக கோத்தபாயா அமைக்கும் குழுவை தாம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவான பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்காவுக்கான பயணத்தை நிறைவு செய்து வெளி-யேறும் போது வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசுடன் மேற்கொள்ளப்படவுள்ள படைத்துறை மற்றும் பொருளாதார உடன்பாடுகள் குறித்து பேசவில்லை. அவை தொடர்பில் பொதுத்தேர்தல் நிறைவுபெற்றதும் கலந்துரையாடப்படும்.

சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததும், இந்த உடன்பாடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் தொடர்பில் ஆய்வு செய்வோம். படைத்துறை ஒப்பந்தம் 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, 18 அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் பயணம் என்பதே அதன் வெற்றி தான்.

image fb11f81bdf மூன்று வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகள் ஒன்றாக சிறீலங்காவில் - சீனாவிடம் உதவிகோர சிறீலங்கா திட்டம்?ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் விரிவான பேச்சுக்களை மேற்கொண்டிருந்தேன். காணிகள் விடுவிப்பு, காணாமல்போனவர்களுக்கான நீதி தொடர்பில் ஆராயப்பட்டது.

சிறீலங்கா எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேண வேண்டும். பல நாடுகளைப்போலவே சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுகளின் முதலீடுகள் தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் பொது அமைப்புக்கள் மற்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு ஐ.நா தீர்மானத்தின் பின்னனியில் அமெரிக்க இருந்தபோதும் தற்போது அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் உறுப்பினராக இல்லை.

ஆனால் சிறீலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார்.

கோத்தபாயாவுக்கு சீன அரசின் வாழ்த்துக்களைத் தெரித்த அவர், சிறீலங்காவின் பொருளாதார அபிவிருத்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்த சீனா உதவும் என்பதுடன், சிறீலங்காவின் ஒருமைப்பாட்டையும்;, சுதந்திரத்தையும் சீனா காப்பாற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமக்கு சீனாவிடம் இருந்து அதிக பொருளாதார உதவி தேவை என மகிந்த சீனா அமைச்சரிடம் கேட்டதுடன், பொருளாதார உதவிகளை வழங்கும் வல்லமை சீனாவுக்கே உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ள ரஸ்யாவின் அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா தமக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் சிறீலங்காவுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வினியோகம் செய்யவும் ரஸ்யா விரும்புவதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, பிரேசில், தென்னாபிரிக்கா மற்றும் ரஸ்யாவைக் கொண்ட பி.ஆர்.ஐ.சி.எஸ் எனப்படும் ஐந்து முக்கிய பொருளாதார நாடுகளின் கூட்டணியில் ரஸ்யா முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிறீலங்காவின் பூகோள பிராந்தி முக்கியத்துவத்தினால் தாம் மிகப்பெரும் அரசியல் அழுத்தங்களைச் சந்தித்துவருவதாக கோத்தபாயா சீனா அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.

சிறீலங்காவின் கேந்திர முக்கியத்துவமே இந்த சந்திப்புக்களின் பின்னனி, உலகின் மிகவும் முக்கிய வழங்கல் பாதையாக கருதப்படும் இந்து வமுத்திரப் பிராந்தியம் சிறீலங்காவில் இருந்து 12 கடல் மைல்கள் தொலைவில் தான் உள்ளது. உலகின் 72 சதவிகித எரிபொருள் வினியோகம் இந்த பாதையால் தான் செல்கின்றது. 50 விகித கொள்கலன்களும் இந்த வழியால் தான் செல்கின்றன. அதுவே தற்போது சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு காரணம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.