Home Blog Page 1880

கோத்தாவுக்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் மீண்டும் கைது

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 02 ஆம் திகதி 44 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று உட்பட மேலும் சில ஆயுதங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு இடையில் வௌ்ளை வேன் ஊடக சந்திப்புடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் கடத்தலில் ஈடுபட்டதாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தெரிவித்த சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

என்டனி டக்ளஸ் பெர்ணான்டோ மற்றும் அதுல சஞ்சீவ ஆகிய சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 06 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

வவுனியா மாவட்டத்தில் இலை மறை காய்களாக பல திறமைகளுடன் கிராமப்புறங்களில் வாழும் மாணவர்கள் அண்மைக் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவிகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றி வெங்கலப்பதக்கத்தை வெற்றிபெற்று கிராமப்புறங்களில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

14 வயது பெண்கள் பிரிவில் போட்டியிட்டு மயில்வாகனம் பிளசிகா,மற்றும் ராஜசேகரம் வினோதா ஆகிய இரண்டு மாணவிகளும் பல சவால்களுக்கு மத்தியில் தெசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டிக்கு தேர்வாகி மொறட்டுவையில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வெங்கலப் பதக்கத்தைப் வெற்றிபெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளனர்.

முதல் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளை ஊக்கப்படுத்தும் முகமாக பாடசாலை சமூகமும் கிராம மக்களும் இணைந்து புதுக்குளம் சிவன் ஆலயத்திலிருந்து வாகனப் போரணியுடன் கௌரவமாக அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து கௌரவப்படுத்தும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் கு.செந்தில்குமரன், உடல்கல்வி ஆசிரிய ஆலோசகர் இ.ரவிச்சந்திரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி பத்மா ஜெயச்சந்திரன், பயிற்றுவிப்பாளர்களான சுரங்கா மற்றும் நிக்ஷன ரூபராஜ் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர், பழைய மாணவர்கள் சமூக ஆர்வலர்களென பலரும் கலந்து கொண்டு சாதனை மாணவிகளை கௌரவித்தனர்.DSC03982 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03975 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03981 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03986 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03987 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு
DSC03974 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03972 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03970 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

DSC03968 1 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு

சுவிட்சலாந்தில் முதல் கொரோனா வைரஸ் தோற்று உறுதிசெய்யப்பட்டது

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள திசினோ மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளி ஒருவர் (இன்று 25) இனங்காணப்பட்டுள்ளார். நாட்டின் தெற்கில் உள்ள இந்த மாநிலம் இத்தாலியின் எல்லையில் அமைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி 15 இல் இத்தாலியின் மிலான் நகரில் வைத்து இந்த தோற்று ஏற்பட்டதாக அறியப்படுகிறது.இந்த நோய்க்கான முதல் அறிகுறிகள் இரு நாட்களின் பின் தோன்றியதாக மத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில்,தனது 70களில் உள்ள குறித்த ஆண் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது .

குறித்த நபர் தற்போது லுகானோவிலுள்ள ஒரு வைத்தியசாலையில்
தனித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் நன்றாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அடுத்த 14 நாட்களுக்கு கண்காணிப்பின் கீழ் வாக்கப்படுவர் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவிட்சலாந்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை மிதமானது எனவும்,இந்த நிலையில் பாடசாலைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் அவசியமற்றவை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் மன்னாரில் இன்று (25) காலை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம் மன்னார் சதோச மனித புதைகுழிக்கு அருகில் சென்று நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தின் போது சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், நீதியான விசாரணை நடாத்தக் கோரியும், சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும், அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டையும், வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் தலைமையில் குறித்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வெந்நீரூற்று வழக்கில் மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிப்பு.!

திருகோணமலை-கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இடைபுகு மனுதாரரின் விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீரூற்று வழக்கு இடைபுகு மனுதாரரை வழக்கில் ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது பற்றியே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் மற்றும் முதலாம், இரண்டாம் மனுதாரர் சார்பில் அரச சட்டத்தரணி மற்றும் இடைபுகு மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ஏ. எஸ். எம். ரபீஸ் உட்பட சிரேனிய புஞ்சிநிலமே ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கில் இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச தேரரினால் முன் வைக்கப்பட்ட ஆவணங்களில் குறித்த கன்னியா வெந்நீரூற்று தொடர்பிலான எந்த ஒரு உரிமைக்கான ஆவணங்களையும் முன்வைக்காத காரணத்தினால், முதலாவது எதிர் மனுதாரரான தொல்பொருள் திணைக்களம் மற்றும் இரண்டாவது மனுதாரரான திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால் கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்திற்கு உரிமை இருப்பதாகவோ அல்லது வில்கம் விகாரை விகாராதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது பற்றியோ எந்தவிதமான ஆவணங்களையும் முன்வைக்கவில்லை.

எனவே குறித்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மனுதாரரை குறித்த வழக்கில் ஒரு கட்சி காரராக ஏற்றுக் கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது எழுத்துமூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதிக்கு அழைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் அமைப்பாளர்களை தமிழரசு கட்சி வேட்பாளராக பட்டிருப்பு தொகுதியில் நிறுத்த எதிர்ப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் இருந்து தமிழரசுகட்சி சார்பாக பொதுத்தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுபவர் யாராக இருந்தாலும் பேரினவாதகட்சிகளில் கடந்த காலத்தில் செயற்படாதவர்களாக இருக்கவேண்டியது அவசியம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்கடந்த 23இம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் பொது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டினார்.

கட்சியில் கடந்த 2015இ தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பாளராகவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராகவும் செயல்பட்ட எவரையும் தற்போதைக்கு தமிழரசு கட்சியில் வேட்பாளராக தெரிவுசெய்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக தமிழரசுகட்சி ஆசனம் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என அவர் கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டிப் பேசினார்.

அவர் கூறிய விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பகால தமிழரசு கட்சியாக செயல்பட்ட களுதாவளை ப.குணராசா என்பவர் கடந்த 2010இ பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அவரை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கி கடந்த 2012இ மாகாணசபை தேர்தலில் தமிழரசு கட்சி வேட்பாளராக நிறுத்தியபோது அவர் வெற்றியடையவில்லை இதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கூறிய காரணம் ‘கடந்த தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் எலக்சன் கேட்டு தமிழ் வாக்குகளை சிங்கள கட்சிக்கு பெற்றுக்கொடுத்த ஒருவரைநாம் எப்படி ஆதரிப்பது’ என்பதே.UNSET மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் அமைப்பாளர்களை தமிழரசு கட்சி வேட்பாளராக பட்டிருப்பு தொகுதியில் நிறுத்த எதிர்ப்பு!

இதே போல் கடந்த 2008இ மாகாணசபை தேர்தலில் பிள்ளையானின் கட்சியில் TMVP கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பழுகாம்ம் வீ.ஆர்.மகேந்திரன் என்பவரை 2012இ மாகாணசபை தேர்தலில் தமிழரசு கட்சியில் உள்வாங்கி வேட்பாளராக நிறுத்தியபோது அவரும் தோல்வி அடைந்தார் அவரின் தோல்விக்கு மட்டக்களப்பு மக்கள் கூறிய காரணம் ‘ஏற்கனவே பிள்ளையானின் கட்சியில் தேர்தல் கேட்டதனால் அவரை நிராகரித்தோம்’ என்பதாகும்.

உண்மயில் களுதாவளை குணம்இ பழுகாம்ம் வீ.ஆர். மகேந்திரன் இருவரும் குறித்த தேர்தல்களின் போது தமிழ அரசு கட்சி உறுப்பினர்களாக இருந்த போதும் மக்கள் அவர்களை ஏற்காமைக்கான காரணம் மாற்று கட்சியில் வேட்பாளராக ஏற்கனவே போட்டியிட்ட ஒருகாரணம் என்பதே உண்மை.

அதே நிலையில் தற்போது பட்டிருப்பு தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக வேட்பாளராக விண்ணப்பித்துள்ள சாணாக்கியன் என்பவர் கடந்த 2015இ ல் பொதுத்தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் பிள்ளையான்இஹிஷ்புல்லாஇஅருண்தம்பிமுத்து இவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை இம்முறை தமிழரசு கட்சி வேட்பாளராக நிறுத்தினால் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகட்சியில் இருந்து விலகிச்செல்லும் இதற்கான பாவமும் பழியும் தமிழரசு கட்சி தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும்.viber image 2020 02 25 07 53 20 மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் அமைப்பாளர்களை தமிழரசு கட்சி வேட்பாளராக பட்டிருப்பு தொகுதியில் நிறுத்த எதிர்ப்பு!

தேர்தல் முடிந்தவைடன் தோல்விக்கான காரணத்தை ஆராய்வதற்கு முன் இப்போதே உண்மையை உணர்ந்து பட்டிருப்பு தொகுதியில் தமிழரசு கட்சியில் வேறு ஒரு பொருத்தமான வேட்பாளரை நிறுத்துங்கள் என அரியநேத்திரன் கூறியதாக அறியமுடிகிறது.

அவர் இந்த கருத்துக்களை கூறும்போது மத்திய குழு உறுப்பினர்கள் 60இபேரும் அவரின் கருத்தை தலை அசைத்து ஆதரவு தெரிவித்தனர் வாலிபர் அணி தலைவர் சேயோன் கைதட்டி இந்த கருத்தை வரவேற்றதையும் காண முடிந்தது.

இதன்பின்பு உரையாற்றிய மட்டக்களப்பு எம்.பி.ஶ்ரீநேசன் அரியநேத்திரன் கருத்தை ஆதரித்ததுடன் இம்முறை தனித்தனியாக வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதை விட்டு கூட்டாக மூன்றுபேர் இணைந்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளாவிட்டால் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தொகை குறையும் நிலை ஏற்படும்  குறிப்பிட்டார்.

சம்பந்தன் மாவைசேனாதிராசா துரைராசசிங்கம் மூவரும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தனர் எனவும் மத்திய குழுவில் கலந்துகொண்ட கட்சி பிரமுகர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்

 

 

கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும் நீங்கள் வெற்றியடைந்துவிடலாம்.’

வெற்றியடைய உங்களுக்குப் பொருத்தமான ஊக்கமளிக்கும் வழிகாட்டி அவசியம். அவர் ஒரு அறிஞராகவோஇ ஆசிரியராகவோஇ தந்தையாகவோஇ நண்பராகவோ, மதகுருவாகவோஇ ஆசிரியராகவோ, ஒரு அமைப்பாகவோ இருக்கலாம் ,ஏன் ஒரு புத்தகமாகக் கூட இருக்கலாம்.

இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்களின் சிறந்த அடைவிற்கு ஊக்கமளித்தல் இன்றியமையாததாகும்.சிறந்த கல்வி அடைவு என்பது கல்வியில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் தமது பெறுபேற்றைப் பெற்று தமது தகுதியை அதிகரித்துக் கொள்ளுதலாகும்.

ஊக்கமளித்தல் எனும் போது அக் கல்வி அடைவை உயர்த்திக் கொள்வதற்காக வழங்கப்படும் கல்வியியல்இபொருளியல், உடலியல்இஉளவியல்,சமூகவியல் ரீதியான உந்துதல்களாகும். சிறந்த உந்துதல் வழங்கும் போது சிறந்த கல்விப் பெறு பேறுகளும், குறைவான பெறுபேற்றிற்கு உந்துததல் அளித்தல் இன்மையும் ஒரு காரணமாக அமையலாம்.

பாடசாலை மாணவர்களை எடுத்துக் கொண்டால் ஆரம்பப் பிரிவில் அதாவது,தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை பெற்றோரின் ஊக்கம் அதிகமாகக் காணப்படுவதுடன், கனிஷ்ட இடைநிலைப்பிரிவில் (ஆறு தொடக்கம் ஒன்பது) பிள்ளையின் சுயமான ஊக்கலும் மேலும் சிரேஷ்ட இடைநிலைப்பிரிவிலும் உயர்தரத்திலும் (ஒன்பது தொடக்கம் பதின்மூன்று) பாடசாலை, சமூகம்இ பெற்றோர் என பல தரப்பட்டவர்களின் ஊக்கலும் சாதாரணமாகக் காணப்படுவதை அவதானிக்கலாம்.

இருந்தபோதிலும் ஊக்கமளித்தலானது எப்படிக் கல்விப் பெறுபேற்றில் தாக்கம் செலுத்துகின்றது என சில தற்போதைய நடைமுறை உதாரணங்களுடன் அதாவது மட்டக்களப்பின் தற்போதைய கல்வி அடைவுடன் ஒப்பிட்டு விமர்சன ரீதியில் நோக்குவோம்.

மட்டக்களப்பு மாவட்டமானது மட்டக்களப்பு,மட்டக்களப்பு மேற்கு,மட்டக்களப்பு மத்தி,பட்டிருப்புஇ கல்குடா என ஐந்து கல்வி வலயங்களைக் கொண்டுள்ளது. இவ் ஐந்து வலயங்களிலும் கடந்த சில வருடங்களில் வெளிவந்த க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது அதாவது எமது சகோதர இனப் பாடசாலைகளை மாத்திரம்; கொண்ட வலயம் அதி சிறந்த
பெறு பேறுகளையும்இமருத்துவ, பொறியியல் பீடத்திற்குத் தெரிவான மாணவர்களின் அதிக எண்ணிக்கையையும் கொண்டுள்ளது.IMGL3044 கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

இப் பெறுபேற்றின்படி மீதமுள்ள நான்கு தமிழ் வலயங்களுடன் ஒப்பிடும் போது கல்வி அடைவில் இவ் வலயம் மிக உயர்வாக உள்ளது. இதன் மறைமுக இரகசியமும் ஊக்கமளித்தல்தான் என்றால் மிகையாகாது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாத்திரமல்ல ஏனைய சகோதர இனத்தவர்கள் இன்று கல்வி அடைவில் பெறும் பெறுபேறுகளையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால் எமது தமிழ் மாணவர்கள் ஆரம்பகாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாலும் தற்போது நவீன தொடர்பாடல் சாதனங்களின் மோகம்,அதிக போதை வஸ்துப் பாவனை மற்றும் பொருளாதார ரீதியான பின்னடைவு போன்றவற்றால் இன்று பெறுபேறுகளில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஏனைய சகோதர இன மதஸ்தாபனங்கள் கல்விக்காக வழங்கும் ஊக்குவிப்பில் அரை மடங்கு கூட எமது இந்து ஆலயங்களோ இந்து மத நிறுவனங்களோ வழங்குவதில்லை. வெறுமனே திருவிழாக்களுக்கும் வானவேடிக்கைகளுக்கும் இலட்சக் கணக்கான பணத்தை போட்டி போட்டு செலவிடுகின்றனர்.

இந்நிலையில் பொருளாதார ரீதியில் இடர்படும் தமிழ் ஏழை மாணவர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருந்த வண்ணமே உள்ளனர். அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி வழங்கினாலே போதும் தமிழ்ச் சமூகம் கல்வியடைவில் உச்சத்திற்குச் சென்றுவிடும்.

மேலும் எமது சகோதர மத நிறுவனங்கள் உயர்தர கணிதஇவிஞ்ஞான பாட ஆசிரியர்களை கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மட்டக்களப்பிற்கு வரவழைத்து அவர்களின் சமூகத்திற்காக பிரத்தியேக வகுப்புக்களை நடத்துகின்றனர்.

மேலும் வார இறுதி நாட்களில் பெற்றோரும் மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களும் தங்கள் சமூகத்தின் கல்விக்காக மேல் மாகாணம் மற்றும் வெளி இடங்களுக்கு பேரூந்துகள் மூலம் பிள்ளைகளை அழைத்துச் சென்று கல்வி புகட்டுகின்றனர்.

அத்துடன் வறுமையான பிள்ளைகள் படிப்பதற்கு மாதம் தோறும் புலமைப் பரிசில்கள் வழங்குகின்றனர். நகர்ப்புறங்களில் தங்கி கல்வி கற்பதற்கு தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். மேலும் வேலை வாய்ப்புக்கள்,போட்டிப் பரீட்சைகள் பற்றிய விழிப்புணர்வுகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் குழுக்களாக்கியும்இ சமய ஆராதனைகளின் பின்னரும் மக்களுக்குப் பரப்புகின்றனர்.unnamed 9 கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

ஆனால் எமது தமிழரிடம் சுயநலமிக்க தன்மையும் பொருளாதார ரீதியில் உயர்வானவர்கள் அவர்களின் பிள்ளைகளை மாத்திரம் வெளிநாடுகளில் படிக்க வைப்பதும் ஏனைய ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்காத தன்மையும் காணப்படுகின்றது. மேலும் தமிழர் மத்தியில் கல்விக்கான ஊக்குவிப்பு வழங்கும் தன்மையும்இ மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் தன்மையும் ஏனைய சகோதர சமூகத்துடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.

ஓரிரு தமிழ்ச்சமூக அமைப்புக்கள் கல்வி பற்றிய விழிப்புணர்வுகளை மற்றும் நிதி உதவிகளை வழங்கினாலும் அவை நம் சமூகத்திற்குப் போதுமானதாகக் காணப்படவில்லை. இவ்வாறான நிலமைகளின் காரணமாகவே எமது மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறைவான சதவீதத்தில் காணப்படுகின்றது.

இந்நிலை தொடர்ந்தால் குறிப்பிட்ட சில வருடங்களில் எமது தமிழ் மாணவர்கள் உயர்ந்த பல பதவிகளில் அங்கம் வகிக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர்.

ஆகவே மட்டக்களப்பாக இருந்தாலும் சரி தமிழ் மாவட்டங்கள் எதுவாக இருந்தாலும் சரி எமது தமிழ் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக சைவ ஆலயங்கள்,தமிழ் சங்கங்கள்இ தமிழர் அமைப்புக்கள்,செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் பொருளாதார ரீதியிலும் கல்வியல் ரீதியிலும் உங்களால் இயன்ற ஊக்குவிப்பை வழங்கி எமது தமிழ் மாணவர்களின் உயர்ந்த கல்வி அடைவிற்கு வழிகாட்டுங்கள்.

“ஊக்குவிப்பே கல்வியின் வெற்றி”

தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே!

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதையும் தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை நிலையுறுத்தி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 24/02/2020 14:00 மணியளவில் Belgium , Brussels அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமாகியது.

BELGIUM , LUXEMBOURG , GERMANY , FRANCE ஆகிய நாடுகளை ஊடறுத்து மனித நேய போராளிகளினால் நீதிக்கான ஈருருளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுல்லது

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது, சிறீலங்கா மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப்பரப்பில் காத்திரமாகத் தடம்பதித்துள்ளதை தமிழினம் மனம்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமிழ்மக்களும் தமது உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து எட்டப்பட்ட இந்தக் களத்தை மேலும் வலுவுள்ளதாக்கிக் காத்திரமாக நகர்த்திச் செல்லும் கடப்பாடு புலம்பெயர்ந்த எமக்கானது என்பதில் இருவேறு கருத்திருக்கமுடியாது.87969300 191961158694658 7540114142405853184 n தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

காலம்காலமாக அடிபட்டு உதைபட்டு அழிவுகளைச் சந்தித்து எமது துயர்நிலையை வெளிப்படுத்தியபோதெல்லாம் வாழாதிருந்த உலகு 2009 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனஅழிப்பின் பின்னரான காலப்பகுதியில் சிறீலங்கா அரசினது மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பில் உரையாடத் தலைப்பட்டுள்ள வேளையில் எமது கடமை என்ன?
கடந்த காலத்தில் எமது உரிமைப் போராட்டத்துக்கு மனவலிமையோடு அள்ளியும் கிள்ளியும் தமது இயலுமைக்கு அமைவாக எமது தேசக்கட்டுமானத்தையும் தேசியபாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவிக்கரம் கொடுப்பது எமது கடமையென வரித்துக்கொண்டவர்கள் நாம்.

அந்த உயரிய பங்களிப்பின் வடிவாக அமைந்த தமிழீழத்தின் கட்டுமானங்களை நேரடியாகத் தரிசித்தவர்களுக்கு அதன் செழுமை புரியும். அவற்றை இந்த உலகு சிங்கள சிறிலங்கா அரசினது பொய்ப்பரப்புரையை நம்பி அழிக்க உதவியதென்பது நாமறிந்ததே.

மனிதஉரிமைகள் மீறப்பட்டமை இனஅழிப்பை மேற்கொண்டமை என்பவற்றுக்குப் பொறுப்புக்கூறுமாறு சிறீலங்காவினது எதேச்சதிகார ஆட்சியாளர்களை கேட்பதும் இறுக்கமற்ற தீர்மானங்களை முன்வைப்பதுமாக இவர்கள் நகரும்.

தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் உள்ள ஜளநாயகத் தளத்தைப் பயன்படுத்தி முன்நகர்த்துவதொன்றே எந்த வினவுதலுக்குமப்பால் தமிழினத்தின் விடுதலையொன்றே தம்முயிர்மூச்செனக்கொண்டு தம்மை அர்பணித்தோருக்காற்றும் கைமாறாகும்.

எமது சுதந்திரத்துக்காக மண்டியிடாது தொடர்ந்து ஓயாது போராடிவரும் தமிழர்களாகிய நாம், சர்வதேச நாடுகள் ஒன்றுகூடுகின்ற இந்த காலப்பகுதியில் இனவழிப்புக்கு உட்பட்டுவரும் எமது மக்களுக்கான நீதியை வலியுறுத்தியும், எமது வரலாற்றுத் தார்மீக உரிமையை வலியுறுத்தியும் பல்வேறு எழுச்சி மிகு மக்கள் போராட்டங்களை ஓயாது தொடர்ந்து நிகழ்த்தவேண்டியிருப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது.

அழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையை, தமிழ்த் தேசியத்தை, தமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும்! உலகிலே நாம் மிகவும் தொன்மையான, வீரமான, தனித்துவமான கலாச்சார பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட ஓர் தேசிய இனம். நாம் எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரனால் வீரமூட்டி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறை.
‘தார்மீக அடிப்படையில் நாம் உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம்.
எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசு அமைக்கும் தகுதி பெற்றவர்கள். அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது’.என்ற எமது தேசியத் தலைவரின் சத்திய வாக்குக்கு அமைய, எமது தலைமை எமக்குக் காட்டுகின்ற வழியில், உலக ஓட்டங்களுக்கு இசைவாக, புவி அரசியல் அசைவுகளை நுணுகி ஆராய்ந்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான பாதையில், காலம் எமக்கிட்ட பரிமாணத்தில் நாம் தொடர்ந்து போராடிவருகிறோம்.

எமது அன்புக்குரிய தமிழ் மக்கள் கடந்த காலங்களில் நிகழ்த்திய ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் வாயிலாக உலக அரங்கில் தமிழர்களுடைய தேசிய விடுதலை அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உங்களால் அவதானிக்க முடிகிறது. முள்ளிவாய்க்காலை அடுத்து, எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு, உலக அங்கீகாரத்துக்காக ஒரு வெற்றிகரமான பரிமாணத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
இது எமது மக்களின் போராட்டம். எமது மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டம். மக்கள்சக்தி வாய்ந்த போராட்டங்களை எந்த சக்தியாலும் அடக்கிவிட முடியாது என்னும் நியதி உண்டு. நாங்கள் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக எழுச்சிபெற்று, எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் காட்டிய பாதையில் இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம்! நிச்சயமாக வீரமிகு போராட்டங்களை நிகழ்த்தி சுதந்திர தமிழீழம் மீட்போம்!

சிங்கள பௌத்த இனவாத சக்திகளையும் ஆட்சி மாற்றங்களையும் காரணம்காட்டி தமிழர்களது உரிமைகளை மறுப்பதும், தீர்வுத்திட்டம் என்ற பெயரில் காலங்கடத்துவதும் சிங்களத்தின் தந்திரமாகவே இருக்கட்டும். அதில் நாம் சிக்கிக்கொள்ளாது விளிப்பாக இருப்பதுடன் இலட்சியத்தில் உறுதியுடன் இருப்பது அவசியமாகும்.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக தியாகி திலீபன் அவர்களின் 32 ஆண்டு நினைவேந்தல் காலப்பகுதியில் உலகின் முன் உரத்து முழங்குவதே ஒன்றே சிங்களத்தின் தந்திரோபாயங்களை முறியடிப்பதற்கான உபாயமாகும்.

எப்படி ஜனநாயக முகத்திரைபோர்த்தி உலகைத் துணைசேர்த்து எம்மைச் சிங்களம் வீழ்த்தியதோ அதே ஜனநாயக வழியைப் பயன்படுத்தி சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்து அதனது இனப்படுகொலை முகத்தை அம்பலப்படுத்தி எமது இலக்காகிய தமிழீழ தாயகத்தை வென்றெடுக்க அனைவரும் அணிதிரள்வோம். அடிமை விலங்குடைத்து நிமிர்வோம்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால், ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் 09/03/2020ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும்
உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மக்களாகிய நாம் இந்த மக்கள் சக்திப் போராட்டங்களை நிகழ்த்தவுள்ளோம் :
1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி,
தமிழர் ஒருங்கிணைப்பு குழு- பெல்சியம் கிளை.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

கிழக்கு மாகாணத்தில் வேட்பாளர்களை அறிவித்தது ரெலோ!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனும், பட்டிருப்பு கல்முனையைச் சேர்ந்த தாமோதரம் பிரதீவன் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாண்டிருப்பைச் சேர்ந்த தாமோதரம் பிரதீவன் ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமாவார். கல்முனை தமிழ் இளைஞர் சேவை அமைப்பின் ஆரம்பகால தலைவராகவும் கிழக்கு மாகாண தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளராகவும் செயற்பட்டக்கொண்டிருப்பவர்.

கல்முனை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மனித உரிமை மீறல்கள் செயற்பாடுகளுக்கு எதிராக துணிவுடன் குரல் கொடுத்துவரும் தாமோதரம் பிரதீவன் கல்முனை முதல் பொத்துவில் வரையான தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் திருப்திகரமான மக்கள் சேவையின் அடிப்படையிலும் அத்துடன் தமிழ்தேசியத்தின்பால் பற்றுறுதியுடன் மாவட்டத்தில் முழு வீச்சுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் கோரிக்கைக்கும் விருப்புக்கும் இணங்கவும் மீண்டும் எமது வேட்பாளராக நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச குழுவினர் ஜெனீவா பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று (25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஆகியோர் தலைமையில் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது.

மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை இணை அனுசரணை வழங்கிய 30/1 மற்றும் 40/1 ஆகிய பிரேரணைகளிலிருந்து விலகும் தீர்மானத்தை வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பேரவைக்கு நாளை அறிவிக்கவுள்ளார்.

கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், ஜெனீவா சென்ற வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் கால அவகாசம் கோரிய 34/1, 40/1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையை மீள பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் தலைவர் எலிச​பத் டிவ்-பிஸ்ல்பர்கரிடம் நேரில் எடுத்துரைத்துள்ளார்.