Home Blog Page 1881

பகிடிவதை செய்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் வீட்டில் ஆவா குழுவினர் தாக்குதல்

பல்கலைக்கழக பகிடிவதை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலிற்கு ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.

யாழ். மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீட்டில் முகங்களை மறைத்து சென்ற அடையாளம் தெரியாதோரால் நேற்று இரவு (12) பத்து மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது வீட்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்கள் தேடப்பட்டு வரப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று ஆவாக்குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல் இல் செயற்பட்டு வரும் இளைஞர்கள் தங்கள் முகநூலில் “தமிழர்களின் அடையாளமாகக் காணப்படும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடத்தப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது செயற்பாடுகள் இடம்பெறும்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறாம் திருத்தச்சட்டத்தை நிராகரித்த மறைந்த முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் !!

தமிழர்கள் தமது அரசியல் பெருவிருப்பினை சுதந்திரமாக முன்வைப்பதனை தண்டனைக்குரிய குற்றமாக கொள்கின்ற சிறிலங்காவின் ஆறாம் திருத்தச்சட்டத்தினை சமீபத்தில் மறைந்த முன்னாள் யாழ் முதல்வர் ராஜா விசுவநாதன் நிராகரித்திருந்ததோடு, அதன் மீது சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவராக இருந்துள்ளதோடு, தனது பதவிக்காலத்தில் சிறிலங்காவின் பிரதமர் ஒருவரை வரவேற்க்க மறுத்த நெஞ்சுரம் கொண்ட துணிச்சல்மிக்க ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமரர் ராஜா விசுவநாதன் தொடர்பில் அன்றை காலகட்டத்தில் வெளிவந்த முக்கியமான ஆங்கிய பத்திரிகையொன்றின் பத்தியொன்று பின்வருமாறு கூறுகின்றது :

ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவர் அதே நேரத்தில் வெற்றிகரமான மேயராகவும் இருக்க முடியுமா? முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. பிரதமர் யாழ் நகரத்துக்கு வருகை தந்த போது அவருக்கு நகராட்சி சார்பில் வரவேற்புக் கொடுக்க மறுக்கும் நெஞ்சுரம் கொண்ட நகர மேயர் ராஜா விசுவநாதனைப் போன்ற ஒரு மேயர் நகர மேம்பாட்டுக்குச் சிறிதாவது அரசின் ஆதரவும் நிதியுதவியும் கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

1979 ஜூன் மாதம் மேயராகப் பதவிப் பொறுப்பேற்ற போதே திரு விசுவநாதன் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஊழலுக்கு எள்முனையளவும் இடந்தராதவர் என்று பெயர்பெற்ற சட்டத்தரணியும் மேயருமான அவர் தம் பதவிக் காலம் முடியப் போகும் நேரத்தில் வேறொரு கசப்பான உண்மையை உணர்ந்திருக்கிறார். மெய்யாகவே ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவராக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நகராட்சி அரசியலில் வெகுவாக முன்சென்று விட முடியுமென எதிர்பார்ப்பதற்கில்லை என்பதே அந்தக் கசப்பான உண்மை.

திரு விசுவநாதனின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் ஒரு மாதக் காலம்தான் உள்ளது என்ற நிலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உயர்தலைமை அவரைக் கைகழுவக் காரணம் அவர் யாழ் நகரத்துக்கு நல்லதொரு நிர்வாகம் வழங்கத் தவறி விட்டார் என்பதாக இருக்குமானல் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈழச் சிக்கலில் உறுதியான நிலையெடுத்து விட்டுக்கொடுக்காமல் நின்றார் என்பதால் நகராட்சி அரசியலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமைக்கு ஒத்துவராதவராகிப் போனதே காரணம் என்றால் இரங்கத்தக்க நிலைதான் என்பது உறுதி.

ஓராண்டுக்கு மேலாயிற்று, 1982 மார்ச்சு 13 சாட்டர்டே ரெவ்யூ இதழ் அதன் பின்பக்கத்தில் ‘அமைச்சருக்குத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மரியாதை, யாழ் மேயர் புறக்கணிப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. காணிவளத் துறை அமைச்சர் காமினி திசநாயகா கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வருகை புரிந்தது பற்றிய செய்தி அது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முதுபெரும் தலைவரும் மாவட்ட வளர்ச்சி மன்றத் தலைவருமான நடராஜா அமைச்சருக்கு மாலைமரியாதை செய்வதற்காக கிளிநொச்சிக்கே சென்றார், மற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதோ ஒரு வகையில் அமைச்சர் வருகையில் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டார்கள் என்னும் அதே நேரத்தில் மேயர் விசுவநாதன் மட்டும் விலகிநின்று பெருமை பெற்றார். சுப்ரமணியம் பூங்காவில் காற்றாலை நிறுவப்பட்டது தொடர்பான வரவேற்பு விழாவில் கூட அவர் பங்கேற்க மறுத்து விட்டார். அவருக்குத் தெரியாமலே இந்த விழா நடத்தப்பட்டு, அதற்குச் சற்றொப்ப 4,000 ரூபாயும் செலவிடப்பட்டது. நாம் வெளியிட்ட செய்தி, பாவம், அந்த மேயருக்குச் சங்கடத்தையே ஏற்படுத்தியது என்று அந்த நேரம் இந்த இதழின் ஆசிரியருக்குத் தகவல் கிடைத்தது.

மேயரின் உள்ளத்தில் நியாயமாகவே கசப்புண்டாகக் காரணம்: தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வெளிப்படையாக அறிவித்துள்ள கொள்கைப்படி நிலையெடுத்தமைக்காக அவர் பழிசுமந்து நின்றார் என்பதே. தலைமையமைச்சர் யாழ் வருகையின் போது அவரைப் பெருமைப்படுத்த நகராட்சி வரவேற்பு நல்க திரு விசுவநாதன் மறுத்து விட்டார் என்றால், சரி, அதுதான் கட்சி வகுத்துக் கொடுத்த கொள்கைவழி. எங்கள் மேயர் கட்சிக் கட்டளைப்படியே செயல்படுகிறார் என்று தலைமையமைச்சரிடம் சொல்ல தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்குத் துணிவுண்டா? இல்லை என்றே வேண்டியுள்ளது.
‘பிரதமரை வரவேற்க மறுத்து அவருக்கு வருத்தமளித்த பின் அவரிடமிருந்து சலுகைகள் கிடைக்கும் என்று மேயர் எதிர்பார்க்க முடியாது.’ சாட்டர்டே ரெவ்யூ இது குறித்துக் கேட்ட போது மேயர் ஆதங்கப்படுகிறார்:

‘உள்ளாட்சி அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது நிதி வழங்குவதாக உறுதியளிப்பார்கள், ஆனால் பிறகு வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடிய வில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி விடுவார்கள். நீர் வழங்குவதில் யாழ்ப்பாணத்து வரி செலுத்துவோரின் தேவைகளை நிறைவு செய்ய நிதி வழங்குவதாகத் பிரதமர் உறுதியளிக்கிறார். திட்டத்தைச் செயலாக்க அதிகாரிகள் கால அவகாசம் கேட்கிறார்கள். யாழ்ப்பாணத்து வரி செலுத்துவோருக்குப் போதிய மின்சாரம் வழங்கக் கிட்டத்தட்ட எட்டு மின்மாற்றிகள் தேவை. கம்பிகள் பழசாகி விட்டன, அவற்றுக்கு மாற்றாகப் புதிய கம்பிகள் பொருத்த வேண்டும், ஆனால் உள்ளாட்சித் துறையிடமிருந்து தேவையான நிதி கிடைக்காத நிலையில் இந்தத் திட்டங்களைச் செயலாக்க வழியில்லை என்று மின்பொறியாளர் சொல்கிறார்.

மருத்துவமனைச் சாலையின் நிலையை மேயர் எடுத்துக்காட்டினார். தருவதாக உறுதியளித்த தார்ப் பீப்பாய்களை அவர் எடுத்துக் கொள்ள விரும்பிய போது, உறுதியளித்த தார் கண்டிக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறிவிட்டனராம். யாழ்ப்பாணத்துக்கான மூடிய கழிப்பறைத் திட்ட்த்தைச் செயலாக்கத் தேவையான நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லையாம்.

‘ஆக்கிரமிப்பு’ செய்யப்பட்ட தமிழ் நகரம் யாழ்ப்பாணத்தையும், ஈழம் பற்றிப் பேசும் அதன் மேயரையும் பொறுத்து சிறிலங்க அரசதிகாரிகளின் மாற்றாந்தாய் மனப்போக்கு குறித்து மேயருக்குள்ள இக்கட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விசுவநாதனுக்குப் பிடிபடாமல் இருப்பதும் அவரைக் காயப்படுத்துவதும் அவரது சொந்தக் கட்சியின் உயர் தலைமையும் நிர்வாகிகளும் கூட ஒத்துழைக்கவில்லை என்பதே. யாழ்ப்பாணம் கடைத் தெருவில் நெரிசலைக் குறைக்கும் வகையில் சிற்றுந்து நிலையத்தை அஞ்சலகம் எதிரில் யாழ் மைதானத்துக்கு மாற்றலாம் என்ற அவரது கருத்துக்கும் கூட அவர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

துரையப்பா அரங்கம் சரிவரப் பராமரிக்கப்பட வில்லை என்று சொல்லப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் அதனை உலங்கு வானூர்திகளின் தரையிறக்கத்துக்குப் பயன்படுத்தும் போது. பராமரிப்பது எப்படி?news paper cut ஆறாம் திருத்தச்சட்டத்தை நிராகரித்த மறைந்த முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் !!

வரிசெலுத்துவோர் சிலரின் தரப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் காலஞ்சென்ற திரு ஆல்பிரெட் துரையப்பா மேயராக இருந்த போது செய்த பணியை ஒப்புநோக்கும் போக்கு காணப்படுகிறது. திரு துரையப்பா ஆளும்கட்சியின் தீவிர உறுப்பினராகவும் உள்ளூர்ப் பிரதிநிதியாகவும் இருந்தார், கொழும்புவில் அதிகார பீடங்களோடு உடனுக்குடன் நேர்த் தொடர்பில் இருந்தார் என்பதால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. கொழும்புவிலிருந்து அரசியல் சலுகைகள் எதிர்பார்க்க முழு உரிமை படைத்தவராக இருந்தார், இறுதியில் அதற்கு விலையாக உயிரையே தந்து விட்டார். எல்லாம் சேர்ந்து புகட்டும் நீதி ஒன்றே ஒன்றுதான்: தமிழ்த்தேசம் முழுவதன் உரிமைகளை விட்டுக்கொடுப்பதன் மூலமே நகரத்தின் வரிசெலுத்துவோருக்கு நன்மைகள் பெற்றுத்தர இயலும். ஒருபுறம் தமிழர்களிடம் ஒரு பகிரங்கத் தோற்றமும், மறுபுறம் ஆட்சியாளர்களிடம் அந்தரங்கமாக வேறு தோற்றமும் காட்டத் தயாரில்லை என்றால் எந்த மேயரும் இந்த அரசியல் தர்மசங்கடத்துக்கே முகங்கொடுக்க வேண்டியிருக்கும். திரு விசுவநாதன் தம் சொந்தக் கட்சியின்பால் கசப்பும் கடுஞ்சோர்வுமான உணர்வுடன் பதவிக்காலத்தை முடித்துக் கொள்ள வேண்டியிருப்பது இரங்கத்தக்க நிலைதான் – ஆனால் இப்போதும் அவர் அக்கட்சியின் உண்மையுள்ள உறுப்பினராகவே இருந்து வருகிறார்.

இவ்வாறு அப்பத்திரிகை அன்றைய காலகட்டத்தில் மறைந்த அமரர் ராஜா விசுவநாதன் பற்றி எழுதியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

ஒளிப்படம் :
நிழல்படம் : யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களது இசை நிகழ்ச்சியின் போது அவரை வரவேற்று உரையாற்றிய வேளையில் எடுக்கப்பட்டது.

ஏழுபேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தல்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலையைச் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தம்பி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு 161ஆவது பிரிவின்படி, சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும், அதற்கு ஒப்புதல் தருவதற்கு எவ்வித கால அவகாசமும் இலலையென்பதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுவரையும் விடுதலை செய்ய மறுத்து காலங்கடத்தி வரும் தமிழக ஆளுநரின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது

இந்நிலையில் ஆளுநருடன் கலந்து பேசி என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது விடுதலையை நோக்கிய ஒரு முன்நகர்வு.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதல் மூலமே சட்டமாகும் என்பது அடிப்படை விதி. இதில் ஆளுநருக்கென்று தனிப்பட்ட எவ்வித அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்புச் சாசனம் வரையறை செய்யவில்லை. ஆகவே, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டியது அவரது தார்மீகக் கடமையாகும்.

அதனை விடுத்து, மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் தடுத்தி நிறுத்தி வைப்பாரென்றால், இது மக்களாட்சித் தத்துவத்தின் மத்துவத்தையே குலைக்கின்ற கொடுஞ்செயலாகும். மாநிலத்தின் தன்னாட்சி உரிமைக்கெதிரான மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்காகும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்துரோகக் குற்றமல்ல. நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல என்று கூறி, இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி விட்டது. இவ்வழக்கிற்கு தடாச் சட்டமே பொருந்தாது என்னும் போது, தடாச் சட்டத்தின் மூலம் ஏழு பேரிடமும் பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரமாகக் கொண்டு அவர்களுக்குத் தண்டனையை அறிவித்திருப்பது மிகப்பெரும் அநீதியாகும்.

ராஜீவ் காந்தி உயிரிழக்கக் காரணமாக இருந்த பெல்ட் குண்டைத் தயாரித்தவர் யாரென்றே இதுவரை மத்திய புலனாய்வுத்துறை கண்டறியாத நிலையில், அதற்கு பற்றரி வாங்கிக் கொடுத்தார் என்னும் குற்றச்சாட்டின் கீழ் தம்பி பேரறிவாளனை 29 ஆண்டுகளாய் சிறைப்படுத்தியிருப்பது எவ்வகை நியாயம்? இவ்வழக்கு என்பது இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படியான கொலை வழக்குத்தான். அதாவது மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு வழக்கு எனும் போது அவர்களை மாநில அரசு விடுதலை செய்வதற்கு என்ன தடையிருக்க முடியும்? தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிற எழுவரும் இக்கொலை வழக்கில் நேரடியாகப் பங்காற்றியதாக நீதிமன்றமே கூறவில்லை.

கொலை வழக்கின் சதித்தன்மை தெரியும் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டு அதற்கு சாட்சியம் எழுவரும் மத்திய புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அளித்த ஒப்புதல் வாக்குமூலங்கள். அவ்வாக்குமூலங்கள் தவறாக திரித்து எழுதப்பட்டவை என்பதை வாக்குமூலத்தைப் பதிவு செய்த மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி தியாகராஜன் ஒப்புக் கொண்டு அதனைப் பிரமாணப் பத்திரமாக உச்ச நிதிமன்றத்திலும் தாக்கல் செய்திருக்கிறார்.

வழக்கின் முழு விசாரணையும் இன்னும் நிறைவடையவில்லை என்பதையும், வழக்கில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்களும், விடை தெரியா மர்மங்களும் ஏராளமாக உள்ளன என்பதையும், வழக்கை விசாரிக்கும் போது சில முக்கிய பிரமுகர்களுக்கு பாரபட்சம் காண்பிக்கப்பட்டு சலுகை அளிக்கப்பட்டது என்பதை மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி ரகோத்மன் பல்வேறு தருணங்களில் எடுத்துரைக்கிறார். இத்தோடு, வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் கே.டி.தாமஸ் எழுவரும் விடுதலைக்குத் தகுதியானவர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறார். கொலையில் நேரப்படிப் பங்காளிகளாகக் குறிப்பிடப்படாத நிலையிலும், இவ்வழக்கில் சனநாயக மரபுகளும், விதிகளும் மீறப்பட்டு பொது புத்திக்கும், அசியல் சதிக்கும் பலிக்கடா அக்கப்பட்டதால், எழுவரும் 29ஆண்டுகளாகச் சிறையிலிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்ற போதும், இவ்வழக்கில் இறந்தவர் முன்னாள் பிரதமர் என்பதாலேயே பாரபட்சம் காட்டுவது நீதித்துறையின் கண்களைக் குருடாக்கும் கொடுந்துரோகம். ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே சட்டம் எனும் ஒற்றுமையை ஒருமுகப்படுத்தும் கொள்கையை தீவிரமாகச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஒரே நீதி என்பதில் மட்டும் விதிவிலக்காக மாறி எழுவரையும் விடுதலை செய்ய மறுப்பது நகைமுரண்.

ஆகவே, இவ்விவகாரத்தில் எழுவர் விடுதலையை வெறுமனே ஏழுபேரது விடுதலை என்ற கோணத்தில் சுருங்கப் பாராது, மாநிலத்தின் தன்னுரிமை தொடர்பான சிக்கல் என்பதை உணர்ந்து அண்ணாவின் பெயரில் இயங்கும் அதிமுக உடனடியாக இதற்கு எதிர்வினையாற்ற முன்வர வேண்டும். எழுவர் விடுதலை விவகாரத்தில் உறுதியாய் நின்றிட்ட முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களது ஆட்சியின் நீட்சியாய் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அம்மையாரின் நிலைப்பாட்டை வழிமொழிந்து எழுவர் விடுதலைக்காக சட்டப் போராட்டமும், அரசியல்வழி அறப் போராட்டமும் நடத்தி ஆளுநருக்க அரசியல் அழுத்தம் கொடுத்து எழுவரது விடுதலையையும் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியை நிறுவிட வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகின்றேன் என அந்த அறிக்கையில் கோரியுள்ளார்.

Attachments area

இழுத்து மூடும் துர்ப்பாக்கிய நிலையில் வவுனியா சின்னத்தம்பனை பாடசாலை வீடியோ இணைப்பு -கோ- ரூபகாந்

வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை. 1957ஆம் ஆண்டு மக்களின் முயற்சியில் ஓலைக் கொட்டில்களில் ஆரம்பிக்கப்பட்டது.

1960.10.29 அன்று சின்னத்தம்பனை பாடசாலையை இலங்கை அரசு பொறுப்பேற்று, சின்னத்தம்பனை அரசினர்  தமிழ் கலவன் பாடசாலையாக இயங்கி வந்தது.

1984ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற வன்செயல் காரணமாக சின்னத்தம்பனை மக்கள் கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்தனர். அப்போது பாடசாலை மூடப்பட்டது. பின்னர் 1990ஆம் ஆண்டு கிராமத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்து பாடசாலை சிறப்பாக இயங்கி வந்தது. தொடர்ந்து நாட்டில் இடம் பெற்ற போர் காரணமாக மீண்டும் பாடசாலை மூடப்பட்டு மக்கள் இடம் பெயர்ந்தனர்.

2001ஆம் ஆண்டு சின்னத்தம்பனை கிராம மக்கள் மீண்டும் கிராமத்தில் மீள்குடியேறினர். அதன் பின் 2002.01.04 ஆம் திகதி ஓலைக் கொட்டில்கள் அமைத்து கொட்டில் வகுப்பறையில் சுமார் 40 தொடக்கம் 50 மாணவர்கள் கல்வி கற்று வந்தனர்.

2013.12.15ஆம் திகதி எஸ்.மரியநாயகம் என்பவர் பாடசாலை அதிபராக நியமனம் பெற்று 75 மாணவர்களுடன் பாடசாலையில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தது.

இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னத்தம்பனை பாடசாலையில் இன்று இரண்டு மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்று வரும் துர்ப்பாக்கிய நிலையில், பாடசாலை இழுத்து மூடும் அபாய நிலை  இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த காலங்களில் செட்டிகுளம் பெரிய புளியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் 2010ஆம் ஆண்டு காண்டைக்குளம் திருநாவுக்கரசு வித்தியாலயமும் மாணவர்கள் வருகை குறைவால் இழுத்து மூடப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.WhatsApp Image 2020 02 13 at 09.02.15 இழுத்து மூடும் துர்ப்பாக்கிய நிலையில் வவுனியா சின்னத்தம்பனை பாடசாலை வீடியோ இணைப்பு -கோ- ரூபகாந்

சின்னத்தம்பனை கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத காலத்தில் சிறப்பாக இயங்கி வந்த பாடசாலை, தற்போது நிரந்தர வகுப்பறைக் கட்டடங்கள், மலசலகூட வசதி, விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியிருந்தும் மாணவர்கள் வருகை மிகக் குறைந்துள்ளமையால் கல்விக்கூடம் மூடப்படும் நிலையில் உள்ளது.

அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற ஆவலுடன் அதிகாலையில் எழுந்து பாடசாலைக்கு வருகை தந்தால், இரண்டு மாணவிகள் மத்திரமே பாடசாலைக்கு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு நாளும் புதிதாக மாணவர்கள் பாடசாலையில் இணைவார்கள் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடனேயே வீடு திரும்புகின்றனர்.

வகுப்பறையை சுத்தம் செய்தல், பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றுதல், முற்றம் கூட்டுதல் உட்பட அனைத்து வேலைகளையும் ஆசிரியர்களும் அதிபரும் இணைந்தே செய்கின்றனர்.

சின்னத்தம்பனை கிராமத்தில் உள்ள பாடசாலையில் ஏன் பெற்றோர்கள் அக்கறை செலுத்தவில்லை.?

கிராமத்தில் இயங்கும் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் நிலையில் இருக்கும் சுமார் 40 தொடக்கம் 50 மாணவர்கள் கிராமத்தில் இருக்கும் பாடசாலையில் கல்வி கற்காமல் ஏன் இரண்டு கிலோ மீற்றர்  தொலைவில் இருக்கும் பாடசாலைக்குச் செல்கின்றார்கள்?

சின்னத்தம்பனை பாடசாலை உயிர்ப்புடன் மீள் எழுச்சி பெற்று கிராமத்தின் கல்வி வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்,  சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் ஏன் மௌனமாக இருக்கின்றார்கள்.?

கிராமத்தின் அழியாத கல்விச் சொத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டிய கிராம மக்கள் ஏன் பாடசாலையில் தமது வெறுப்பைக் காட்டுகின்றனர் என பல கேள்விகள் எழுகின்றது.2 இழுத்து மூடும் துர்ப்பாக்கிய நிலையில் வவுனியா சின்னத்தம்பனை பாடசாலை வீடியோ இணைப்பு -கோ- ரூபகாந்

இந்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு கோட்டக் கல்வி அதிகாரியை எமது இலக்கு செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதில் வழங்கிய கோட்டக் கல்வி அதிகாரி முத்து ராதாகிருஸ்ணன், வவுனியாவில் செட்டிகுளம் பிதேசத்தில் பல கிராமப் பாடசாலைகளில் மாணவர்களுடைய வரவு கணிசமான அளவு குறைந்து கொண்டு செல்கின்றது.

நவநாகரீக உலகில் நகர்ப்புற பாடசாலைகளில் கல்வி கற்றால் சிறந்த பெறுபேறுகளை பெற முடியும் என மக்கள் நினைக்கின்றார்கள். இதன் காரணத்தினால் ஊரில் இருக்கும் பாடசாலைகளில் மாணவர்கள் பிரசன்னம் குறைவாகவே காணப்படுகின்றது.

அந்த வகையில் வவுனியா சின்னத்தம்பனை பாடசாலையில் தற்போது இரண்டு மாணவர்களே கல்வி கற்கின்றனர். அவர்களுக்காக அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந் நிலையில் பாடசாலையை தொடர்ந்து இயங்கச் செய்வதற்கு பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், கிராமத்து பொது அமைப்புக்கள் என பலரிடம் பலமுறை கூட்டம் கூடிக் கதைத்தும் ஒருவிதமான பயனும் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் சின்னத்தம்பனை கிராமத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கும் கல்றல் செயற்பாடுகளுக்கு ஏற்ற சூழலாக சின்னத்தம்பனை பாடசாலை அமையவில்லை. எனவே மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு குறித்த இரண்டு மாணவர்களையும் அயல் கிராமத்தில் அமைந்திருக்கும் வீரபுரம் பாடசாலையில் இணைத்து கல்வி புகட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றோம்.

சின்னத்தம்பனை பாடசாலைக்கு மாணவர்கள் வரவு அதிகரிக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் சின்னத்தம்பனை பாடசாலை இயங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என கோட்டக் கல்வி அதிகாரி தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

‘கோவிட்-19’ ஆல் நேற்று மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘கோவிட்-19’ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதன்கிழமையன்று(நேற்று) 242 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நடந்த மரணங்களில் புதன்கிழமைதான் மிக அதிகம்.
இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.மேலும் 14,840 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சீராக இருந்துவந்த நிலையில், புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கையில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் செவ்வாயன்று கடந்த இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக 2015 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹூபே மாகாணத்தில் புதன்கிழமை பதிவான மரணங்களால் சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1350-ஐ கடந்தது. மேலும் வைரஸ் தாக்குதலால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் சீனாவில் ஏறக்குறைய 60,000 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.43f025586ca04e7c930f15ae270cf8c2 18 'கோவிட்-19' ஆல் நேற்று மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், தற்போதைய நிலையில் இந்த வைரஸ் தொற்று எப்போது கட்டுப்படுத்தப்படும் என்று கணிப்பது இயலாது என்று கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், ”தற்போதைய நிலையில் இந்த தொற்று பரவல் எந்த திசையிலும் செல்லலாம்” என்று எச்சரித்துள்ளார்.

ஹூபே மாகாணத்தில் புதன்கிழமை பதிவான மரணங்களால் சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1350-ஐ கடந்தது. மேலும் வைரஸ் தாக்குதலால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் சீனாவில் ஏறக்குறைய 60,000 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், ”தற்போதைய நிலையில் இந்த தொற்று பரவல் எந்த திசையிலும் செல்லலாம்” என்று எச்சரித்துள்ளார்.

நன்றி- பிபிசி

வடக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா மாவட்டம் புறக்கணிப்பு.வீடியோ இணைப்பு

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாகாணமட்ட போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் நடைபெறுவதில்லை என வவுனியா விளையாட்டு வீர்களும் பயிற்றுவிப்பாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாகாண விளையாட்டுப் போட்டிகள் எவையுமே கடந்த 4 வருடகாலமாக வவுனியாவில் நடாத்தப்படவில்லையென விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் சிறந்த தேசிய விளையாட்டு வீரர்கள் திறமையான இளைஞர் யுவதிகள் காணப்படுகிறனர் விளையாட்டு போட்டிகள் நடாத்துவதற்கு பொருத்தமன விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் காணப்படுகின்றபோதிலும் மாவட்டத்தில் மாகாண விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படுவதில்லை.

இம்முறையும் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் மாகாணமட்ட விளையாட்டுப் போட்டிக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்ட போதிலும் அதில் வவுனியாவில் எவ்வித போட்டிகளும் நடாத்தப்படுவதாக குறிப்பிடப்படவில்லை.

இதனால் போட்டிகளிளே பங்குபெற்றும் விளையாட்டு வீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் போன்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறப்பு!!

சுடர்ஓளி தென்னை பயிர்ச்செய்கையாளர்அபிவிருத்தி சங்க அலுவலகம் வ்வுனியா சமயபுரம் கிராமத்தில் இன்றயதினம் திறந்துவைக்கப்பட்டது.

சங்கத்தின் தலைவர் இ.யோ.கேமன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னைபயிர்செய்கை சபையின் வலய இணைப்பாளர்
ஜெயந்த பமுனுஆராட்சி முதன்மை அதிதியாக கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.

கிராமமட்டங்களில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காகவும் தென்னையின் மூலம் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை அதிகரித்து அதனால் வரக்கூடிய உப வருமானங்களை பெருக்குவதுடன், தொழில் வாய்ப்பினை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு குறித்த சங்கம் இயங்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

IMG 20200213 095622 தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறப்பு!!
smart

IMG 20200213 095614 தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறப்பு!!
smart
IMG 20200213 091643 தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறப்பு!!
smart

இந்நிகழ்வில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் உதயச்சந்திரன், தென்னை அபிவிருத்தி சங்கங்களின் இணைப்பாளர் மா.ரோய் ஜெயக்குமார்,பயிரச்செய்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வன்னி மாவட்ட புளொட் வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) சார்பாக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி முன்னாள் அதிபர் கந்தையா சிவலிங்கமும் இந்த தேர்தலில் புளொட் சார்பாக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பாக அண்மையில் வவுனியாவில் கருத்துத் தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரமான த.சித்தார்த்தன், வன்னி மாவட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தங்கள் கட்சி சார்பாக இரு வேட்பாளரை நிறுத்தவுள்ளதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தந்த மாவட்டக்குழு தீர்மானித்து அந்தந்த வேட்பாளர்கள் யார் என்பதை உறுதி செய்து அறிவிப்போம் எனவும் தெரிவித்தார்.

இதற்கமைவாக முன்னாள் வவுனியா நகரபிதாவம், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், மற்றும் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி முன்னாள் அதிபரும் வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர். க.சிவனேசனின் சகோதரருமான க.சிவலிங்கம் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்துவதாக கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதுடன், விரைவில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழுபேர் விடுதலை தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் எம்மிடம் இல்லை தமிழக அரசு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை பெற்று வரும் 7 சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசிற்கு இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழுபேர் விடுதலை குறித்து பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. அத்துடன் விடுதலை செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மாநில அரசிற்கு அதிகாரமில்லை என்ற வாதத்தை தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018 செப்டெம்பர் 09ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏழுபேர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்திருந்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஸ்ணன் தற்போது முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை என்றும் 7பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் நியாயமற்ற முறையிலும், சட்டவிரோதமாகவும் சிறையில் அடைத்துள்ளதால் தங்கள் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என வாதிட்டார். மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமென்றும், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமாகவே நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து மாநில அரசு நளினி உட்பட 7பேரின் விடுதலை தொடர்பாக 2018 செப்டெம்பரில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியதென்றும், அமைச்சரவை பரிந்துரைத்தாலும் அது தொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே என்றும், எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசிற்கு அதிகாரம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இதனையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நளினி சட்டபுர்வ காவலில் இருக்கிறாரா அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா என்பது குறித்து தெளிவுபடுத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தவிட்ட நீதிபதிகள் விசாரணையை பெப்ரவரி 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

தனிச் சிங்கள அரசை உருவாக்க வேண்டும்: ஞானசார தேரர் அழைப்பு

தனிச் சிங்கள அரசை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ், முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவங்கவேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நேரத்தில் இருந்து இன்று வரை தான் ஒரு சிங்கள பெளத்த தலைவன் என்பதைப் பல செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளார்.

நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்றவேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்துக்கும் தடையாக உள்ளன. எனவே உருவாகும் தனிச் சிங்கள அரசில் அடிப்படைவாதக் கொள்கைகளற்ற தமிழ் – முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்படவேண்டும்” என்றார்.