கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும் நீங்கள் வெற்றியடைந்துவிடலாம்.’

வெற்றியடைய உங்களுக்குப் பொருத்தமான ஊக்கமளிக்கும் வழிகாட்டி அவசியம். அவர் ஒரு அறிஞராகவோஇ ஆசிரியராகவோஇ தந்தையாகவோஇ நண்பராகவோ, மதகுருவாகவோஇ ஆசிரியராகவோ, ஒரு அமைப்பாகவோ இருக்கலாம் ,ஏன் ஒரு புத்தகமாகக் கூட இருக்கலாம்.

இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்களின் சிறந்த அடைவிற்கு ஊக்கமளித்தல் இன்றியமையாததாகும்.சிறந்த கல்வி அடைவு என்பது கல்வியில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் தமது பெறுபேற்றைப் பெற்று தமது தகுதியை அதிகரித்துக் கொள்ளுதலாகும்.

ஊக்கமளித்தல் எனும் போது அக் கல்வி அடைவை உயர்த்திக் கொள்வதற்காக வழங்கப்படும் கல்வியியல்இபொருளியல், உடலியல்இஉளவியல்,சமூகவியல் ரீதியான உந்துதல்களாகும். சிறந்த உந்துதல் வழங்கும் போது சிறந்த கல்விப் பெறு பேறுகளும், குறைவான பெறுபேற்றிற்கு உந்துததல் அளித்தல் இன்மையும் ஒரு காரணமாக அமையலாம்.

பாடசாலை மாணவர்களை எடுத்துக் கொண்டால் ஆரம்பப் பிரிவில் அதாவது,தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை பெற்றோரின் ஊக்கம் அதிகமாகக் காணப்படுவதுடன், கனிஷ்ட இடைநிலைப்பிரிவில் (ஆறு தொடக்கம் ஒன்பது) பிள்ளையின் சுயமான ஊக்கலும் மேலும் சிரேஷ்ட இடைநிலைப்பிரிவிலும் உயர்தரத்திலும் (ஒன்பது தொடக்கம் பதின்மூன்று) பாடசாலை, சமூகம்இ பெற்றோர் என பல தரப்பட்டவர்களின் ஊக்கலும் சாதாரணமாகக் காணப்படுவதை அவதானிக்கலாம்.

இருந்தபோதிலும் ஊக்கமளித்தலானது எப்படிக் கல்விப் பெறுபேற்றில் தாக்கம் செலுத்துகின்றது என சில தற்போதைய நடைமுறை உதாரணங்களுடன் அதாவது மட்டக்களப்பின் தற்போதைய கல்வி அடைவுடன் ஒப்பிட்டு விமர்சன ரீதியில் நோக்குவோம்.

மட்டக்களப்பு மாவட்டமானது மட்டக்களப்பு,மட்டக்களப்பு மேற்கு,மட்டக்களப்பு மத்தி,பட்டிருப்புஇ கல்குடா என ஐந்து கல்வி வலயங்களைக் கொண்டுள்ளது. இவ் ஐந்து வலயங்களிலும் கடந்த சில வருடங்களில் வெளிவந்த க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது அதாவது எமது சகோதர இனப் பாடசாலைகளை மாத்திரம்; கொண்ட வலயம் அதி சிறந்த
பெறு பேறுகளையும்இமருத்துவ, பொறியியல் பீடத்திற்குத் தெரிவான மாணவர்களின் அதிக எண்ணிக்கையையும் கொண்டுள்ளது.IMGL3044 கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

இப் பெறுபேற்றின்படி மீதமுள்ள நான்கு தமிழ் வலயங்களுடன் ஒப்பிடும் போது கல்வி அடைவில் இவ் வலயம் மிக உயர்வாக உள்ளது. இதன் மறைமுக இரகசியமும் ஊக்கமளித்தல்தான் என்றால் மிகையாகாது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாத்திரமல்ல ஏனைய சகோதர இனத்தவர்கள் இன்று கல்வி அடைவில் பெறும் பெறுபேறுகளையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால் எமது தமிழ் மாணவர்கள் ஆரம்பகாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாலும் தற்போது நவீன தொடர்பாடல் சாதனங்களின் மோகம்,அதிக போதை வஸ்துப் பாவனை மற்றும் பொருளாதார ரீதியான பின்னடைவு போன்றவற்றால் இன்று பெறுபேறுகளில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஏனைய சகோதர இன மதஸ்தாபனங்கள் கல்விக்காக வழங்கும் ஊக்குவிப்பில் அரை மடங்கு கூட எமது இந்து ஆலயங்களோ இந்து மத நிறுவனங்களோ வழங்குவதில்லை. வெறுமனே திருவிழாக்களுக்கும் வானவேடிக்கைகளுக்கும் இலட்சக் கணக்கான பணத்தை போட்டி போட்டு செலவிடுகின்றனர்.

இந்நிலையில் பொருளாதார ரீதியில் இடர்படும் தமிழ் ஏழை மாணவர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருந்த வண்ணமே உள்ளனர். அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி வழங்கினாலே போதும் தமிழ்ச் சமூகம் கல்வியடைவில் உச்சத்திற்குச் சென்றுவிடும்.

மேலும் எமது சகோதர மத நிறுவனங்கள் உயர்தர கணிதஇவிஞ்ஞான பாட ஆசிரியர்களை கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மட்டக்களப்பிற்கு வரவழைத்து அவர்களின் சமூகத்திற்காக பிரத்தியேக வகுப்புக்களை நடத்துகின்றனர்.

மேலும் வார இறுதி நாட்களில் பெற்றோரும் மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களும் தங்கள் சமூகத்தின் கல்விக்காக மேல் மாகாணம் மற்றும் வெளி இடங்களுக்கு பேரூந்துகள் மூலம் பிள்ளைகளை அழைத்துச் சென்று கல்வி புகட்டுகின்றனர்.

அத்துடன் வறுமையான பிள்ளைகள் படிப்பதற்கு மாதம் தோறும் புலமைப் பரிசில்கள் வழங்குகின்றனர். நகர்ப்புறங்களில் தங்கி கல்வி கற்பதற்கு தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். மேலும் வேலை வாய்ப்புக்கள்,போட்டிப் பரீட்சைகள் பற்றிய விழிப்புணர்வுகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் குழுக்களாக்கியும்இ சமய ஆராதனைகளின் பின்னரும் மக்களுக்குப் பரப்புகின்றனர்.unnamed 9 கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

ஆனால் எமது தமிழரிடம் சுயநலமிக்க தன்மையும் பொருளாதார ரீதியில் உயர்வானவர்கள் அவர்களின் பிள்ளைகளை மாத்திரம் வெளிநாடுகளில் படிக்க வைப்பதும் ஏனைய ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்காத தன்மையும் காணப்படுகின்றது. மேலும் தமிழர் மத்தியில் கல்விக்கான ஊக்குவிப்பு வழங்கும் தன்மையும்இ மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் தன்மையும் ஏனைய சகோதர சமூகத்துடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.

ஓரிரு தமிழ்ச்சமூக அமைப்புக்கள் கல்வி பற்றிய விழிப்புணர்வுகளை மற்றும் நிதி உதவிகளை வழங்கினாலும் அவை நம் சமூகத்திற்குப் போதுமானதாகக் காணப்படவில்லை. இவ்வாறான நிலமைகளின் காரணமாகவே எமது மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறைவான சதவீதத்தில் காணப்படுகின்றது.

இந்நிலை தொடர்ந்தால் குறிப்பிட்ட சில வருடங்களில் எமது தமிழ் மாணவர்கள் உயர்ந்த பல பதவிகளில் அங்கம் வகிக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர்.

ஆகவே மட்டக்களப்பாக இருந்தாலும் சரி தமிழ் மாவட்டங்கள் எதுவாக இருந்தாலும் சரி எமது தமிழ் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக சைவ ஆலயங்கள்,தமிழ் சங்கங்கள்இ தமிழர் அமைப்புக்கள்,செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் பொருளாதார ரீதியிலும் கல்வியல் ரீதியிலும் உங்களால் இயன்ற ஊக்குவிப்பை வழங்கி எமது தமிழ் மாணவர்களின் உயர்ந்த கல்வி அடைவிற்கு வழிகாட்டுங்கள்.

“ஊக்குவிப்பே கல்வியின் வெற்றி”