இலங்கையில் மனித உரிமை நிலவரம் தொடர்ந்து மோசம்- பிரிட்டன்

94 Views

இலங்கையில் மனித உரிமை நிலவரம்

2021ம் ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் இலங்கையில் மனித உரிமை நிலவரம் தொடர்ந்தும் மோசமடைந்து வந்ததாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள வருடாந்த மனித உரிமை அறிக்கையிலேயே இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்த கவலை வெளியாகியுள்ளது.

31 முன்னுரிமைக்குரிய நாடுகளில் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் காணப்பட்ட மனித உரிமை நிலைவரம் குறித்து பிரிட்டனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 முன்னுரிமைக்குரிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களை கண்காணிக்கும் நடவடிக்கையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதையும் பாதுகாப்பு படையினர் அதிகரித்துள்ளனர் என தெரிவித்துள்ள பிரிட்டன், கண்மூடித்தனமாக கைது செய்யும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

நபர்களை தீவிரவாதமயப்படுத்தலில் இருந்து மீட்பதற்காக கைது செய்து தடுத்து வைப்பதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள பிரிட்டன், இந்த நடைமுறை நீதித்துறையின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.

காணாமல் போனவர்கள் அலுவலகம் போன்றவற்றிற்கு தலைமை தாங்குவற்கு சர்ச்சைக்குரிய நபரை நியமித்தார் எனவும் பிரிட்டன் தனது மனித உரிமை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 இலங்கையில் மனித உரிமை நிலவரம் தொடர்ந்து மோசம்- பிரிட்டன்

Leave a Reply