கோட்டா வீட்டுக்கு போ – கொழும்பில் 3வது நாளாக தொடரும் போராட்டம்

இலங்கை சந்தித்துள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்சவையும் அவரது தலைமையிலான அரசாங்கத்தையும் பதவி விலக வலியுறுத்தி கோட்டா வீட்டுக்கு போ என்ற போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் இன்று (11) 3வது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

இப் போராட்டத்தில் இளைஞர், யுவதிகள் அதிகளவானோர் ஒன்றுதிரண்டு காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார முன்னேற்றத்திற்கு கொள்கை அடிப்படையிலான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, கோட்டா வீட்டுக்குப் போகும் வரை நாங்களும் வீட்டுக்குப் போகமாட்டோம் என்று தெரிவித்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தினால் கொழும்பில் பதற்றமாக சூழல் நிலவிவருகிறது.

இதனையடுத்து குறித்த பகுதிகளில் அதிகளவான காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tamil News