குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜேர்மனியும் புறக்கணிப்பு

அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் பிடி ஆணையினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஜேர்மனிக்கு வர முடியாது இருப்பது மிகவும் மோசமான செயல் என ஜேர்மனில் கடந்த வாரம் இடம் பெற்ற தேர்தலில் வெற்றியீட்டிய புதிய அதிபர் பிறிட்றிச் மேர்ஸ் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்ரியன் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவுள்ள புதிய தலைவர் தனது முதலாவது ஊடக சந்திப்பில் இஸ்ரேலிய பிரதமருக்கு ஜேர்மனிக்கு வருமாறு அழைப்பை விடுத்துள்ளார். காசா வில் இஸ்ரே லின் தாக்குதலில் 48,300 பேர் கொல்லப்பட்டது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மீது கடந்த வருடம் நவம்பர் மாதம் அனைத்துலக குற்ற வியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித் திருந் தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கையில் நீதிமன்றத் தின் தீர்ப்பை அதில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு தன்னிட்சையாக மீறுவதை ஏற்றுக்கொள்ள முடி யாது என அனைத்துலக நீதிமன்றம் ஜேர்மன் அதிபரின் கருத்துக்கு தனது பதிலை தெரிவித்துள் ளது.
அதேசமயம் இது ஒரு இரட்டைப் போக்கு நிலைப்பாடு என ஜேர்மன் அதிபரின் கருத்தை இடது சாரிக் கட்சிகள் கடுமை யாக விமர்ச்சித்துள்ளன. அனைத்துலக நீதிமன்றத் தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரஸ்ய அதிபரை கைது செய்யும் ஜேர்மனி எவ்வாறு இஸ்ரேலிய அதிபரை அதில் இருந்து பாதுகாக்கும் எனவும் அவை கேள்வி எழுப்பியுள்ளன.