தென்னாப்பிரிக்காவின் நிறவேற்றுமைக்காலத்து கடைசி அதிபரான FW de Klerk காலமானார்

115 Views

கடைசி அதிபரான FW de Klerk

தென்னாப்பிரிக்காவின் நிறவேற்றுமைக் காலத்து கடைசி அதிபரான FW de Klerk வியாழன் (நவம்பர் 11) இன்று தனது 85 வயதில் காலமானார் என்று அவரது அறக்கட்டளை அறிவித்துள்ளது.

FW de Klerk மற்றும் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆகியோர் 1993 இல் நாட்டில் வெள்ளையர் ஆட்சியில் மாற்றத்தை ஏற்றுபடுத்தியதற்காக  அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.

புற்றுநோயுடன் போரிட்டு வந்த அவர் உயிரிழந்ததாக அவரது அறக்கட்டளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முன்னாள் ஜனாதிபதி FW de Klerk புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து இன்று காலை ஃப்ரெஸ்னேயில் உள்ள அவரது வீட்டில் அமைதியாக இறந்தார் என FW de Klerk அறக்கட்டளை   கூறியுள்ளது.

110937139 deklerk3 தென்னாப்பிரிக்காவின் நிறவேற்றுமைக்காலத்து கடைசி அதிபரான FW de Klerk காலமானார்

பிப்ரவரி 2, 1990 அன்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) மற்றும் பிற விடுதலை இயக்கங்கள் மீதான தடையை நீக்குவதாக அறிவித்த அவரது புகழ்பெற்ற உரைக்காக அவர் மிகவும் நினைவுகூரப்படுகிறார்.

அதே உரையில் நிறவெறிக்கு எதிரான  மண்டேலாவை 27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad தென்னாப்பிரிக்காவின் நிறவேற்றுமைக்காலத்து கடைசி அதிபரான FW de Klerk காலமானார்

Leave a Reply