இலங்கையில் மீண்டும் முடக்கம்? இன்று மீண்டும் ஆலோசனை!

432 Views

police check point இலங்கையில் மீண்டும் முடக்கம்? இன்று மீண்டும் ஆலோசனை!நாட்டின் தற்போதைய பேராபத்தான நிலைமையில் நாட்டை மீண்டும் முடக்குவதா என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பு முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இன்று வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொரோனா அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை தொடக்கம் இரவு வரை நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இராணுவத் தளபதி, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. எனினும், இந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று மீண்டும் கூட்டம் நடைபெறவுள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply