இந்தியாவிடம் இருந்து இலங்கையை வந்தடையவுள்ள இறுதி டீசல் கப்பல்

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் இன்று(16) கொழும்பை வந்தடையவுள்ளது.

இதன்மூலம் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

எவ்வாறாயினும், பெட்ரோல் கப்பல் வரும் திகதியை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை உறுதியாக கூறவில்லை.

இன்று(16) வந்தடையவுள்ள கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் இல்லை என தெரிவித்து சில எரிவாயு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எனினும் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று(16) அதிகாலை முதல் மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

Tamil News