வரும் திங்கள் அன்று விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் நடைபெறும்- சுமந்திரன்

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்


விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திங்கள் கிழமை வடக்கு கிழக்கில் நடத்த உள்ள போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் அன்று விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்,

விவசாயிகளின் போராட்டம், நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது.

வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும். இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்களுக்கூடாக 18ம் திகதி திங்கற்கிழமை காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

கோவிட் தொற்று காரணமாக சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப் பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் ஓரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இவ்வார்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  விடுத்துள்ள போராட்ட அழைப்புக்கள் தொடர்பில், தமக்கு எதுவும் தெரியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள்   தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த போராட்டங்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும், அதற்கான அழைப்பும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், இலங்கை தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ ஆகிய மைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad வரும் திங்கள் அன்று விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் நடைபெறும்- சுமந்திரன்

Leave a Reply