இந்தியா:வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

308 Views

மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில்,  அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றாலும், நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில்  3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்   தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து  விவாதமின்றி குறித்த மசோதா  4 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் ஏன் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது  என எதிர்க் கட்சிகள்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad இந்தியா:வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

Leave a Reply