எனது மகனை கொன்றுவிட்டு பஞ்சமாபாதகன் நின்மதியாய் இருக்கின்றான்:பாலசுந்தரத்தின் பெற்றோர் தெரிவிப்பு

407 Views

படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் குற்றச்சாட்டு

படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் குற்றச்சாட்டு: இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசல் தளத்திற்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலர் எனது மகனை சுட்டுக்கொன்றதுமல்லாமல்  பஞ்சமா பாதகன் சந்தோஷமாக திரிகின்றான் என படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்  வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு விசாரனை எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது பாலசுந்தரத்தின் பெற்றோர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில்,

இவர்களது கள்ள வேலைகள் எனது மகனுக்கு தெரிந்து இருக்கின்ற காரணத்தினால்தான் 15 பேரை வைத்து அடித்தும் வெடி வைத்தும்கொண்டுள்ளனர் என சந்தேகம் எழுந்துள்ளது .

ஒரு இராஜாங்க அமைச்சரின் வீட்டில் உள்ள சிசிடிவி கமராக்கள் வேலை செய்யாதற்க்கான காரணம் என்ன? அல்லது அவரது வீதியிலுள்ள மற்றய கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன ?திட்டம் போட்டு  அடித்தும் வெடி வைத்தும்  கொலை செய்துள்ளனர் என்பது தான் உண்மையாய் இருக்கின்றது.

நாங்களும் மாதக்கணக்கில் நீதிமன்றத்தில் அலைந்து திரிகின்றோம் எமது கண்ணீருக்கான பதில் கடவுள் நிச்சயம் தருவான்”  என்றனர்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad எனது மகனை கொன்றுவிட்டு பஞ்சமாபாதகன் நின்மதியாய் இருக்கின்றான்:பாலசுந்தரத்தின் பெற்றோர் தெரிவிப்பு

Leave a Reply