தமிழீழ விடுதலைப் புலிகள், பொது பல சேனா, சிங்ஹலே பதிவுகளுக்கு முகநூல் தடை

பதிவுகளுக்கு முகநூல் தடை
தமிழீழ விடுதலைப் புலிகள், பொதுபல சேனா, அந்த அமைப்பைச் சேர்ந்த கலகொட அந்தே ஞானசால தேரர் மற்றும் சிங்ஹலே அமைப்பு தொடர்பில் எந்தவொரு பதிவையும் இடுவதற்கு  முகநூல் தடை விதித்துள்ளது. 

முகநுாலில் இடம்பெறும் வகைப்படுத்தல்கள் மற்றும் அது தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் ஊடாக, உலகில் உள்ள பல்வேறு அமைப்புக்கள்  விளம்பரங்களை மேற்கொள்வதற்கும், அமைப்பு சார்பாக பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் வருடத்துக்கு ஒரு முறை இந்த அமைப்புக்கள் தொடர்பான பட்டியல் புதுப்பிக்கப்படும். இந்த நிலையில், இலங்கையில் மூன்று அமைப்புக்களுக்கு இவ்வாறு பிரசாரங்களை மேற்கொள்ள முகநூல் தடை விதித்துள்ளது.

இதன் படி, இவ்வருடமும் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை மேற்கொள்ள அந்நிறுவனம் தடை விதித்துள்ளது. முகநூல் தமது  வகைப்படுத்தலின் கீழ், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டு இவ்வாறு தடை விதித்துள்ளது. இதற்கிடையில், நாட்டில் உள்ள பொதுபல சேனா அமைப்பு மற்றும் அந்த அமைப்பைச்  சேர்ந்த கலகொட அத்தே ஞான சார தேரர் தொடர்பிலும் எந்தவொரு பதிவையும் இடுவது முகநூலினால் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல சிங்ஹலே என்ற அமைப்புக்கும் பதிவுகளுக்கு முகநூல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad தமிழீழ விடுதலைப் புலிகள், பொது பல சேனா, சிங்ஹலே பதிவுகளுக்கு முகநூல் தடை