வலிவடக்கு பகுதியில் காணி  அபகரிப்பு – மக்கள் போராட்டம்

456 Views

வலிவடக்கு பகுதியில் காணி அபகரிப்பு
வலிவடக்கு பகுதியில் காணி அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் நில அளவை திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad வலிவடக்கு பகுதியில் காணி  அபகரிப்பு - மக்கள் போராட்டம்

Leave a Reply