அவசரகால பிரகடனத்தைத் தொடர்ந்து நீடிப்பது குறித்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கோரப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு எதிராக 27 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆக இருக்கையில், வெறுமனே 27 பேர் மாத்திரமே அதற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
அவ்வாறெனில் இந்த முக்கிய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவசரகாலப் பிரகடனம் குறித்து பாராளுமன்றத்துக்கு வெளியே எதிர்ப்பை வெளிக்காட்டுவதால் என்ன பயன்? என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்



