வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளத்தில் கைது

271 Views

8 பேர் புத்தளத்தில் கைது

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளம், கருவெலச்செவ காவல் துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவின் பாலமோட்டை, குஞ்சுக்குளம், கொந்தக்காரங்குளம், நெடுங்கேணி, கீரிசுட்டான் ஆகிய பகுதிகளை சேர்ந்த   8 பேரே வவுனியாவில் இருந்து பேருந்து மூலம் புத்தளம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக  கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம், புத்தளம், கருவெலச்செவ  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டுள்ளதாகவும், அதற்காகவே புத்தளம் வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து  மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply