163 Views
21பேர் மட்டக்களப்பில் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப் பட்டள்ளனர். களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நான்கு பெண்கள் அடங்களாக 21பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த 21 பேரும் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்காக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களும் படகும் காத்தான்குடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.