கல்வி என்பது மனித உரிமை, ஆனால் அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளுக்கு அது சாத்தியமற்ற கனவு

204 Views

கல்வி என்பது மனித உரிமை

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை/தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுப்பில் வைக்கும் கொள்கையினை ஓகஸ்ட் 2012க்குப் பின் அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால் படகு வழியாக தஞ்சமடைந்த பல அகதிகள் தடுப்பிலும் தற்காலிக விசாவிலும் உள்ளனர்.

ஆனால், இவ்வாறு இருக்கும் அகதிகள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தால் அவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி பெறும் வாய்ப்பு என்பது சாத்தியமற்ற கனவாகவே உள்ளது.

இந்த அகதிகள் தொடர்பான விசா முறைகளை மாற்றுவதன் மூலமே இந்த அகதிகளுக்கான கல்வி வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். கல்வி என்பது மனித உரிமை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply