இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பலவீனமான நிலையில் உள்ள குடும்பங்கள் உண்ணும் உணவை குறைத்து கொண்டுள்ளன அல்லது சத்துக்குறைந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்கின்றன என ஐநா அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
பொருளாதாரரீதியில் பலவீனமான நிலையில் உள்ள மக்களின் உணவுப்பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலை என்பன எதிர்மறையான தாக்கத்திற்குள்ளாகியுள்ளன என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் தனது சர்வதேச தகவல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.