டெல்டா அதிகரிப்பு :வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்- பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு

IMG 20210530 WA0037 e1626329071791 டெல்டா அதிகரிப்பு :வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்- பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு

பொது மக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இலங்கையில், டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருவதால் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அத்திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம், ஒவ்வொரு நபருக்கும் நோய் தாக்கும் அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், பாதிக்கப் பட்டவர்களில் சுமார் 1.5 சதவீதம் பேர் இறக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொது மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

+அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.

+திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் பிற பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்

+பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

+அறை, அரங்குகள், லிஃப்ட், வாகனங்கள் போன்ற மூடப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்.

+அவ்வப்போது கைகளை சவற்காரமிட்டு கழுவவும்

+இரண்டு மீட்டருக்கு மேல் சமூக இடைவெளி பின்பற்றவேண்டும்

+நோய் தொற்று அறிகுறி இருந்தால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

ilakku-weekly-epaper-140-july-25-2021