கடந்த ஒரு வருடத்தில் தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக 44,168 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத பாதைகள் வழியாக தாய்லாந்துக்குள் நுழைந்தவர்கள் எனப்படுகின்றது. இதில் 30 ஆயிரம் பேர் எல்லைப் பகுதிகளுக்கு அருகாமையிலேயே கைது செய்யப்பட்டவர்கள் என்றும் 10 ஆயிரம் பேர் தாய்லாந்தின் உட்பகுதிகளுக்குள் கைது செய்யப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அத்துடன், கடத்தல் காரர்களாக செயல்பட்ட 411 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தின் உதவி பேச்சாளர் Apisamai Srirangson.