இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கலவரங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கலவரக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைது செய்ய பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.