மாலைதீவில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேறுமாறு போராட்டம் முன்னெடுப்பு

216 Views

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவினை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி, மாலைதீவு மக்கள், அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் முன்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் இலங்கை புலம்பெயர் மக்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மாலைதீவில் இருந்து கோட்டாபயவை வெளியேற்றக்கோரி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதே நேரம் மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என  மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம்  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply