இலங்கை-போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு

111 Views

இலங்கையில் அதிபர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்துவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், இலங்கை தலைநகர் கொழுப்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் இன்று காலை  மக்கள்  திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிங்களத்தில் ‘அரகலயத ஜெயவேவா’ அல்லது “போராட்டத்திற்கு வெற்றி” என்ற பிரபலமான சொற்றொடரின் கோஷங்கள்  மக்களால் எழுப்பப்படுகின்றன.

 அத்துடன் கோட்டா வீட்டுக்கு போ” என்ற வாசங்கள் ஏந்திய பதாகைகளுடனும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிபர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்துவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply