இலங்கையில் பதற்றமான சூழல்- தனது சேவைகளை இடைநிறுத்துவதாக அமெரிக்க தூதரகம் தகவல்

114 Views

இலங்கை்கான  அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் தற்போது இடம்பெறும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களால் பதற்றமான சூழல் நிலவுவதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது  என தூதரகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று பிற்பகலுடன் மூடப்படும் தூதரகம் நாளையும் முழுநேரமாக மூடப்பட்டு அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆகவே இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துவதாகவும் தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply