ஹைட்டி நிலநடுக்கம்-  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக உயா்வு

1629236966386 ஹைட்டி நிலநடுக்கம்-  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக உயா்வு

ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் காயமடைந்தவா்களின் எண்ணிக்கையும்  9,900   உயர்வடைந்துள்ளது.

கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால்  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன. இந்த இடிபாடுகளில் சிக்கி   உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு  தெரிவித்துள்ளது. மேலும், 9,900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு   தெரிவித்துள்ளது.

ஹைட்டியில் ஏற்பட்ட  இந்த நிலநடுக்கம், 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.

ilakku-weekly-epaper-143-august-15-2021