நாட்டை முடக்குங்கள்- அரசை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு

454 Views

IMG 20210818 WA0006 நாட்டை முடக்குங்கள்- அரசை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரபணி உதவியாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் மதியம்12 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG 20210818 WA0004 நாட்டை முடக்குங்கள்- அரசை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் போதுமான அளவு ஒட்சியனை களஞ்சியப்படுத்து, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஒருவாரத்திற்கு நாட்டினை முழுமையாக முடக்கு, சுகாதார துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பணி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply