வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கொரோனாத் தொற்று

415 Views

1613537235524 வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கொரோனாத் தொற்று

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கடந்த வாரம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதனை அடுத்து அவர் பங்கேற்றிருந்த கூட்டம் ஒன்றில்  கலந்துகொண்டிருந்த வடக்கின் உயர் அதிகாரிகள் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply