மன்னாரில் கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம் – மருத்துவர் ரி.வினோதன்

487 Views

FB IMG 1628917915792 1  மன்னாரில் கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம் - மருத்துவர் ரி.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் நடமாடுவதற்கு செப்டம்பர் முதலாம் திகதி முதல் தடுப்பூசி அடையாள அட்டை அவசியம் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சமூக பரவலாக மாறுவதை தவிர்க்கும் நோக்கில் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் மன்னார் மாவட்டத்தில் பயணங்களை மேற்கொள்ளும் 30 வயதிற்கு மேற்பட்ட  அனைவரும்  தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும்  அட்டையை கட்டாயம்  கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

பொதுமக்கள் போக்குவரத்தின் போது,   பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினர்  பரிசோதனை செய்வார்கள்

மேலும் மன்னார் மாவட்டத்தில் நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்  தடுப்பூசிகள் எதுவும் பெறாதவர்கள்  திங்கள் செவ்வாய் புதன் போன்ற நாட்களில் காலை 9லிருந்து மாலை 3 மணி வரை  023 222 2916 எனும் இலக்கத்தோடு தொடர்புகளை கொண்டு பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படும்” என்றார்

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக ஆயிரத்து 261 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply