இலங்கையில் மேலும் 155 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 155 பேரில் 85 ஆண்களும், 70 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதில் 3 பெண்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள். 14 பெண்கள், 27 ஆண்கள் என 41 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 111 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில், 53 பெண்களும், 58 ஆண்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை, மேலும் 3 ஆயிரத்து 142 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 260ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 173 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 628 ஆக உயர்வடைந்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.