யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த 78 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இதேபோன்று, கொழும்புத்துறையைச் சேர்ந்த 79 வயது நபர் ஒருவரும், புத்தூரைச் சேர்ந்த 75 வயது ஆண், ஏழாலை – மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயது ஆண், கோண்டாவிலைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவருமாக ஐவர் உயிரிழந்தனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176ஆக உயர்வடைந்துள்ளது.