திருகோணமலை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்கள் அவதி

1OyGF6ZRSfEXNMdtZcB5ANGYePeQqZsw திருகோணமலை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்கள் அவதி

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மேலதிக நோயாளிகளை அனுமதிக்க இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் பல மணி நேரம் வெளி நோயாளர் பிரிவு (OPD) காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட  பகுதிகள் நோயாளர்களினால் நிரம்பியுள்ளதால்  வேறு சிகிச்சைகளுக்காக வரும் நோயாளர்களுக்கு  கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்   ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்றாளர்களின்  வீதம் அதிகரிக்கும் பட்சத்தில் இடப் பற்றாக் குறையை தீர்க்கும் விதத்தில் புதிய நோயளர் அறைகள்    உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021