ஓகஸ்டு 14 பிரிவினை பயங்கரங்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் – இந்தியப் பிரதமர்

55 3 600x375 2 ஓகஸ்டு 14 பிரிவினை பயங்கரங்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் - இந்தியப் பிரதமர்

ஓகஸ்டு 14-ம் திகதி (இந்தியா-பாகிஸ்தான்) பிரிவினையில் நிகழ்ந்த பயங்கரங்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ருவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

“பிரிவினையின் வலிகள் மறக்கப்பட முடியாதவை. மில்லியன் கணக்கான நமது சகோதர, சகோதரிகள் இடம் பெயர்ந்தார்கள். கண்மூடித் தனமான வெறுப்பு, வன்முறை காரணமாக பலர் உயிரிழந்தார்கள்.

நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக ஓகஸ்ட் 14 பிரிவினை பயங்கரங்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படும்” என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021