கிழக்கில் கொரோனா மரணங்கள் 750 ஐ தாண்டியது

80 Views

கிழக்கில் கொரோனா மரணங்கள்கிழக்கில் கொரோனா மரணங்கள்: கிழக்கு மாகாணத்தில் மரணங்களின் எண்ணிக்கை 750ஜத் தாண்டியுள்ளது. இதுவரை 751 மரணங்கள் சம்பவித்துள்ளன. என்று கிழக்கு மாகாண சுகாதார துசேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

இதுவரை திருமலை மாவட்டத்தில் அதிகூடிய 263பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 251 பேரும், கல்முனையில் 148பேரும், அம்பாறையில் 89பேரும் மரணித்துள்ளனர்.
வழமைக்குமாறாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொற்றுகளும் மரணங்களும் நான்கு மடங்காக அதிகரித்துக்காணப்பட்டன.

நேற்றுவரை 44435 தொற்றுக்களும், 751மரணங்களும் நிகழ்ந்துள்ளன. தற்போது வழங்கப்படும் தடுப்பூசியின் பின்னர் இத்தொகை குறையலாமென எதிர்பார்க்கப் படுகிறது.

கிழக்கில் அதிஆபத்து நிறைந்த பகுதிகளாக தெஹியத்தகண்டிய களுவாஞ்சிக்குடி உஹன அம்பாறை மட்டக்களப்பு தமன மகாஓயா ஆகிய பகுதிகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 468பேர் புதிய தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளார்கள். 10மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply