நெல் களஞ்சியசாலைகளுக்கு சீல்- தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் செயல் என குற்றச்சாட்டு

70 Views

நெல் களஞ்சியசாலைகளுக்கு சீல்: கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நெல் களஞ்சியசாலைகளை சீல்வைத்து, நெல்லை பறிமுதல் செய்வது என்பது தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் செயல் என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இலங்கையில் அரிசியின் தேவையினை நிறைவு செய்வதற்காக அரச அதிகாரிகளால் நாடளாவிய ரீதியில் நெல் பதுக்கியுள்ளவர்களைத் தேடி அவற்றினை கைப்பற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளின் நெல் களஞ்சியங்களை இலக்கு வைத்து நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகளினால் முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெரியளவிலான முதலாளிகள் நெல்லை பதுக்கிவைப்பதனை  யாரும் தடுக்கவில்லை. ஆனால் விவசாயிகள் காலங்காலமாக நெற்செய்கை செய்து சேமிக்கும் பழக்கத்தினைக் கொண்டிருக்கையில், அவர்களின் நெல்லை சீல் வைத்துக் கைப்பற்றும் நடவடிக்கைகளை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளன தலைவர் ந.சுந்தரேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் “சிங்கள விவசாயிகளையும், தமிழ் விவசாயிகளையும் அரசாங்கம் ஒன்றாக நோக்ககூடாது. கடந்த யுத்த காலத்தில் கொள்ளை இலாபம் அனுபவித்தவர்கள் சிங்கள விவசாயிகள். ஆனால் இன்று அனைத்தையும் இழந்து  தற்போது தமது பொருளாதாரத்தினை கட்டமைக்கும் நேரத்தில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக நவகிரி நீர்பாசன திட்ட விவசாய அமைப்பின் தலைவர் சி.கந்தசாமி சுட்டிக்கா ட்டியுள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply