சந்தோஷ் ஜா, ரில்வின் சில்வா கலந்துரையாடல்

அண்மைய காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ச்சியடைந்துள்ள இராஜதந்திர மற்றும் கலாசார உறவுகள் , இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும், இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோர் கலந்துரையாடினர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (11) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, அண்மைய காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைகும் இடையில் வளர்ச்சியடைந்துள்ள இராஜதந்திர மற்றும் கலாசார உறவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. மேலும், இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும், இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் குறித்தும் இதன்போது சிறப்பாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் தொழில்நுட்பத் துறை மற்றும் சிறு, நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கான பயிற்சிகள் உள்ளிட்ட துறைகளில் இலங்கைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளர் கலாநிதி ராம்பாபு செல்லப்பா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வெளிநாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் கல்பனா மதுபாஷிணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.