இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 13,267 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் இலங்கையில் கொரோனா தொற்றினால் 67 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றின் அறிகுறிகளைக் கண்டறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால் 95 % சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு  சுமார் 8,500 கர்ப்பிணிகள்  கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு, அவர்களில்  56 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் தாய் மற்றும் சேய் நல இயக்குநர் மருத்துவர் சித்ரமாலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றால் 524,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply