காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக, இளைஞர் ஆய்வு வெளியீடு

157 Views

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இளைஞர் ஆய்வு


விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்
செயற்திட்டத்தில் திருகோணமலை மாவட்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக ஆய்வுப் பணயத்தில் இளையோர் பங்குபற்றுதலின் பிரதிபலிப்புக்கள் என்ற தலைப்பிலான ஊடக சந்திப்பு  திருகோணமலை மாவட்ட விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இளைஞர் ஆய்வு வெளியிடப்பட்டது.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ,போதைப்பொருள் பாவனையும் இளையோர் சமுதாயமும் ,  தமிழ் மக்களும் மொழி உரிமையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தேவைப்பாடு அதன் பிரயோக நிலையும் என்ற தலைப்புக்களிலான ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டது.

மூதூர்-  மல்லிகைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை மாதிரியாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பின்வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை தொடர்பாக இவ்வாறு தெரிவித்தார்கள்  

2009 யுத்தத்தின் போதும், அதற்கு முன்னரும் வடக்கு கிழக்கில் அதிகளவானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றங்கள் காலத்திற்கு காலம் இடம்பெற்ற போதிலும் கூட எந்த விதமான தீர்வினையும் பெற்றுக் கொடுக்க வில்லை. இவ்வாறு ஆண்டுகள் கடந்து செல்கின்றதே தவிர மக்களுக்கு எவ்விதமான தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

நீதிக்கான பரிந்துரைகள்

1.சகலவிதமான நியாமற்ற கைதுகளும் சித்திரவதைக்கு உட்படுத்தலையும் கைது செய்யப்பட்டபோது நிகழ்ந்த உயிர் இழப்புக்களுக்காவும் விசாரனைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2.காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நடைபெறும் விசாரணைகள், கொழும்பு மேல் நீதிமன்ற விசாரனைகளில் இருந்து விடுபட்டு மாவட்ட நீதிமன்ற விசாரனைகளின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

3.தொழில் மற்றும் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
நினைவு கூறுதலுக்கான பரிந்துரைகள்

 4.காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களிடம் மறைந்து இருக்க கூடிய ஆளுமை தன்னம்பிக்கை, துணிவு, மனவுறுதி என்பவற்றை வெளிக்கொணர்வதன்  மூலமாக பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், என்பவற்றை நடாத்தி, சமூகத்தில் அவர்களையும் எழுச்சி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசு , அரச சார்பற்ற நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என இளைஞர்களின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக, இளைஞர் ஆய்வு வெளியீடு

Leave a Reply