“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி பக்கசார்பான முடிவுகளை எடுக்குமானால் அரசுக்கு பாதகமாக அமையும்

211 Views

அரசுக்கு பாதகமாக அமையும்

ஒரே நாடு ஒரே சட்டம்:முஸ்லிம்கள் நால்வர் உட்பட 13 நபர்கள் இந்த செயலணியில் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் எவரும் அதில் இல்லை. எனவே சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை பறித்தெடுக்காமல் பக்கச்சார்பான இனம்சார் முடிவுகளின்றி செயற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாசிக் றியாஸ்தீன் தெரிவித்தார்.

“ஒரே நாடு ஒரே சட்டம் “செயலணி தொடர்பாக ஊடகங்களுக்கு  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறுபான்மை இனத்துக்கு மாற்றமாக செயற்பட்டால் எதிர்கால தேர்தல்கள் அரசுக்கு பாதகமாக அமையும். ஜனநாயக இடதுசாரி முண்ணனி கட்சி அரசின் பங்காளிக் கட்சியாக செயற்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்திலும் பொதுஜன அரசாங்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என நம்புகிறோம். ஆனாலும் இவ்வாறான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி சிறுபான்மை சமூகத்தின் தமிழ் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். பாதுகாக்காது விட்டால் மக்கள் எதிர்காலத்தில் தீர்ப்பை வழங்குவார்கள் என்றார்.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad "ஒரே நாடு ஒரே சட்டம்" செயலணி பக்கசார்பான முடிவுகளை எடுக்குமானால் அரசுக்கு பாதகமாக அமையும்

Leave a Reply