மீண்டும் இந்தியாவுக்குள் வந்த சீனாவின் ஆடம்பர ஆடை செயலி

இந்தியாவின் செல்வந்தரும், றியலைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி சீனாவுடன் மேற்கொண்ட வர்த்தக உடன்படிக்கையினைத் தொடர்ந்து சீனாவின் ஆடம்பர ஆடை பொருட்களுக்கான Shein India app செயலி மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடக அறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. லடக் பகுதியில் 2020 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து டிக்டொக், பப்ஜி, செயின் உட்பட 59 இற்கு மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்திருந்தது.
ஆனால் தற்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கு மிடையிலான உறவுகள்வலுப்பட்டு வரும் நிலை யில் இந்தியா மீண்டும் சீனாவின் செயலிகளை இந்தியாவுக்குள் அனுமதித்துள்ளதுடன், சீனாவும் இந்தியா
வும் நேரிடையான விமானப் போக்குவரத்தையும் ஆரம்பிக்கவுள்ளதாக அறி வித்துள்ளன.
இந்த செயலியின் இந்தியாவுக்கான உரிமையை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளதுடன், இந்தியாவின் தரவுகளுடன் அது இயக்கப் படவுள்ளது. 2008 ஆம் ஆண்டு சீனாவின் இலத் திரனியல் வர்த்தகப் பிரிவினால் (Chinese e-commerce company) உருவாக்கப்பட்ட இந்த செயலி சிங்கப்பூரில் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், மேற்குலக நாடுகளின் தரத்திற்கு அமைவான ஆடம்பர ஆடை வகைகளை கொள்வனவு செய் யும் செயலியாக பிரபலம் பெற்றிருந்தது.
இந்தியா இதனை தடை செய்தபோதும் இந்திய மக்கள் கடந்த 5 வருடங்களாக வெவ்வேறு இணையத்தளங்களின் ஊடாக இந்த செயலியை பயன்படுத்தி ஆடைகளை கொள்வனவு செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.