விசா நடைமுறைகளில் மாற்றம் – படகுகள் வருகை அதிகரிக்கலாம் என அச்சம் 

புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் படகுகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான தற்காலிக பாதுகாப்பு  விசா விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதால் ஆள்கடத்தல்காரர்கள் அதனை பயன்படுத்தி புகலிடக்கோரிக்கையாளர்களை படகுகள் மூலம் அழைத்து வர முயலாம் என எதிர்கட்சி எச்சரித்துள்ள நிலையில்  அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளதுடன் படகுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு விமானங்கள் மற்றும்  கப்பல்களை பயன்படுத்துகின்றனர்.

இறைமை எல்லை நடவடிக்கையின் கட்டளை தளபதி விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு வளங்களை அதிகரித்துள்ளது.

திங்கட்கிழமை அன்டனி அல்பெனிஸ் அரசாங்கம் 2013 இல் இறைமையுள்ள எல்லை நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னர் படகுகள் மூலம் வந்தவர்களிற்கு 19,000 temporary protection and safe haven enterprise visa holders வழங்கப்பட்ட  இல் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது

இதன் மூலம் அவர்கள் நிரந்தர அந்தஸ்த்தினை பெறமுடியும். இந்த நடவடிக்கைகள் மூலம் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை – பாதிப்புகள் உண்மையானவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை என அடையாளம் காணப்பட்டவர்களிற்கு மாத்திரம் இந்த மாற்றங்களை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிதாக படகுகள் மூலம் வருபவர்களை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இதன் காரணமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் குடியேற்றவாசிகள் நுழைய முடியும் என உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.