இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தம் நீட்டிப்பு

இஸ்ரேல் – லெபனான் இடையே ஏற்கெனவே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அது மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர்நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

“பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் பென்டகனில் மே 29-ஆம் தேதி தொடங்கும். இதில் இரு நாடுகளின் ராணுவ குழுக்களும் கலந்துகொள்வார்கள்,” என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்தார்.

முன்னதாக ஏப்ரல் 16-ஆம் தேதி அன்று போர்நிறுத்தம் ஒன்றை டிரம்ப் அறிவித்திருந்தபோதும் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

புதன்கிழமை மட்டும் லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.