யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பிரதேச சபையை தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பு
யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பிரதேசசபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது.
வலி வடக்கு பிரதேச சபைக்கான கன்னி சபை அமர்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வலி வடக்கு பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற...
காணிகள் விடுவிக்கப்படுவது குரித்து வடக்கு ஆளுநர், பிரித்தானிய தூதுவருடன் கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தின் வலி. வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கிற்கு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய...
மன்னாரில் பாடசாலை மாணவி மீது இராணுவ சிப்பாய் பாலியல் தொந்தரவு
மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த...
சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் டில்வின் சில்வா!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின்...
காஸாவில் உதவி பெறச் சென்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 45 பேர் பலி!
காஸாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் உதவிகள் பெறச் சென்ற மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் பலியாகியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ”முதலில் இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள், மக்கள்...
வடக்கு மாகாணத்தில் எரிபொருள் நிலையங்களில் இன்றும் தொடர்ந்தது வரிசை!
வடக்கு மாகாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் நீண்ட வரிசைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று பரப்பப்பட்ட போலித் தகவல்கள் காரணமாக யாழ்ப்பாணத்தில்...
செம்மணிப் புதைகுழி விவகாரம் நீதி நிலைநாட்டப்படவேண்டும்: யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழுத்தம்!
செம்மணிப்புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது- இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அவர்கள் அனுப்பி...
இஸ்ரேல் – ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு: பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு!
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில்...
சர்வதேச வர்த்தகப் போரால் இலங்கைக்குப் பெரும் பாதிப்பு!
சர்வதேச வர்த்தகப்போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதித் தொழிற்றுறை பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 59ஆவது...
‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி
வடக்கிலும், கிழக்கிலும், அரச படைகள், பௌத்த தேரர்கள் மற்றும் கட்டமைப்புக்கள், வன பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனக் கட்டமைப்புக்கள் ஏட்டிக்குப்...










