யாழ்ப்பாணத்தில் புதிதாக போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் அமைக்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காகப் புதிய புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற "முழுநாடுமே ஒன்றாக" எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புச்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலம் தடுப்பில் உள்ளவர்கள் குறித்து அரசாங்கம் ஆராய்வு
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களின் தண்டனையைத் தளர்த்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...
‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின்நிலையம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு!
2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE...
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இப்போதுதான் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன: ஜோசப் ஸ்டாலின் கருத்து
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடம் இப்போதுதான் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. இதனை ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டும். ஜனாதிபதியுடன் இது குறித்துப் பேசியபோது, குறைபாடுகள் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுடன் ஒரு திட்டத்தைச்...
‘திட்வா’ புயலால் 93% மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
'திட்வா' புயலின் பின்னர் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த...
உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு
உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது.
23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார்.
பிரதி நிதியமைச்சர்...
இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்: மட்டக்களப்பில் பதற்றம்!
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினரின் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
நேற்று இரவு 10 மணியளவில்...
அமெரிக்காவின் கத்தார் தூதரகம், தனது ஊழியர்களுக்கும் அமெரிக்க குடிமக்களுக்கும் எச்சரிக்கை
அமெரிக்காவின் கத்தார் தூதரகம், தனது ஊழியர்களுக்கும் அமெரிக்க குடிமக்களுக்கும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
“பிராந்தியத்தில் தொடரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும், அல்-உதெய்த் விமானப்படை தளத்துக்கு அவசியமற்ற...
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்திடமிருந்து விடுவிக்க வலியுறுத்தல்!
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும். உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும்...
புதிய கல்விச் சீர்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் ஒன்றியம் போராட்டம்
அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலவசக் கல்வியைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் புதன்கிழமை (14) பிற்பகல் கொழும்பு புறகோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய கண்டன...










