புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் இடம்பெறவில்லை : ஐக்கிய மக்கள் சக்தி
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் எவ்வித ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
புதிய யாப்பு உருவாக்கத்துக்கான எண்ணக்கரு பத்திரம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சி
எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாரென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...
சர்ச்சைக்குரிய கிவுல் ஓயா (Kiwul Oya) அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் விளக்கம்
கிவுல் ஓயா (Kiwul Oya) அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்த...
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சிறிதரனை நீக்க தீர்மானம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவர் பதவியிலிருந்து, சிவஞானம் ஸ்ரீதரனை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் உறுப்பினர்கள் இந்த விடயத்தை...
இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினம்: கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம்!
இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின நிகழ்வு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் திங்கட்கிழமை (ஜன 26) கொழும்பில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கொழும்பு, 'இந்திய இல்லத்தில்' நடைபெற்ற இந்த பிரதான நிகழ்வுக்கு, இலங்கைக்கான இந்திய...
நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்!
ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘திட்வா’ புயல் பாதிப்பு: வீடுகளை நிர்மாணிக்க காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு
'திட்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவ்வீடுகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான காணிகளை அன்பளிப்புச் செய்வதற்கு நாடளாவிய ரீதியிலுள்ள நன்கொடையாளர்களுக்கு...
பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை: அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டு
"இலங்கையில் யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றமையும், அம்மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சித்திரவதைகளைத் தடுப்பதற்கான...
ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு
ஜனவரி மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரித்து வழங்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவோம் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் ஆராய்வதற்கு பாராளுமன்றத்தால் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குழுவில் முன்னிலையாகி எமது தரப்பு யோசனைகளை முன்வைக்க தயாராகவுள்ளோம். நடைமுறையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டால் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும்...










