எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது : ஜனாதிபதி
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
'டித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை குறித்து அமைச்சர் விஜித ஹேரத் கருத்து
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மேம்பாடு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, பொருளாதார இராஜதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதியாக அமைந்துள்ளது என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
அரசிடம் விலை போன பாராளுமன்ற உறுப்பினரும்! ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்களும்!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் கள் தங்களுக்கான மேய்ச்சல் தரை நிலங்களை கோரி பல வருடங்களாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
மறுபுறம் மட்டக்களப்பு எல்லையில் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளை குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சிகள் தற்போது...
டித்வா சூறாவளியால் பாதிப்பு: மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகள்...
எப்ஸ்டீன் ஆவணங்கள் – மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், பீட்டர் மண்டெல்சனை (ஒரு வருடத்திற்கு முன்பு) அமெரிக்காவுக்கான பிரிட்டனின் தூதராக நியமித்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார். அதிகாரமிக்க மனிதர்கள் விசாரணைகளில் இருந்து தப்பிக்கும்போது மக்களுக்கு ஏற்படும் கோபத்தை தான்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம்!
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் சட்டமூலம் ஒன்றை...
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக...
Jeffrey Epstein தொடர்பான ஆவணத்தில் இலங்கையின் பெயரும்!
அமெரிக்க நீதித்துறை இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணக் காப்பகத்தில், 'இலங்கை' என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத்...
சிங்களவர்கள் சமஸ்டியை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் : கம்மன்பில
சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய...
ஐக்கிய தேசிய கட்சியை புதிய தலைமுறையிடம் கையளிக்க தயார்: ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியை புதிய தலைமுறையினரிடம் கையளிக்கத் தயாராகி வருவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற 'Smart UNP' டிஜிட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில்...










