மண்டைதீவு படுகொலை வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றைய தினம் (31) ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அது எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் அனீபா ரஜீவ் முன்னிலையில்...

பெண்களின்  உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம்: யாழில் போராட்டம்

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களின்  உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில்...

இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் உணவகப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ்...

தந்தைசெல்வாவின் இலக்கு ஒன்றுதான் அது இனத்தின் விடுதலை: பா.அரியநேத்திரன்

தந்தை செல்வாஎன அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898,மார்ச்,31.ல் பிறந்து 1977,ஏப்ரல்,26,ல் இயற்கை அடைந்தார். அன்னாரின் 128, வது ஜனன தினம் எதிர்வரும் 2026,மார்ச்,31,ம் நாளாகும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்குரார்ப்...

தந்தை செல்வாவின் 128-வது ஜனனதினம் யாழ்ப்பாணத்தில் அஞ்சலி!

ஈழத் தமிழர்களின் அரசியல் பிதாமகன் எனப் போற்றப்படும் தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 128-வது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். நகரில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு,...

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய இஸ்ரேல்!

பாலஸ்தீன கைதிகளுக்கு  இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30) நிறைவேற்றியுள்ளது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக...

யூரியா உரக் கையிருப்பு தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையையடுத்து, நாட்டில் யூரியா உரக் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளதால், நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்கப்படும். இந்த வருடத்தின் சிறுபோக செய்கைக்காக நெற்செய்கைக்கு மாத்திரம் கலப்பற்ற...

டெல் அவிவ் மற்றும் துபாய்க்கான அனைத்து விமானங்களும் இரத்து!

ஏர் கனடா: டெல் அவிவ் மற்றும் துபாய்க்கான அனைத்து விமானங்களும் செப்டம்பர் 7 வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் பிரான்ஸ் / கேஎல்எம்: ஏர் பிரான்ஸ், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ்வுக்கான விமானங்களை ஏப்ரல்...

இலங்கையின் பெரும்பாகப்பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்பு – ஐ.நா

இலங்கை உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளால் பெறப்படும் கடன்கள் அந்நாடுகளின் பெரும்பாகப்பொருளாதாரத்தை மிகமோசமானப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனவே அவ்வழுத்தங்களைக் குறைப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு...

இலங்கையில் மருத்துவர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

நீதிக்கு புறம்பான முறையில் வைத்தியர்களின் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்படுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (31)...