தெற்கு மெக்சிக்கோவில் வாகன விபத்து- 53 அகதிகள் பலி, பலர் காயம்

338 Views

மெக்சிக்கோவில் வாகன விபத்து-

மெக்சிக்கோவில் வாகன விபத்து: தெற்கு மெக்சிக்கோவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அதிகளவில்  ஏற்றிச் சென்ற மூடிய  வாகனம்  ஒன்று  விபத்திச் சிக்கியதில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதுடன்  54 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நெடுஞ்சாலை நடைபாதை மற்றும் சரக்கு லொறி உள்ளே சிதறிக் கிடப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில காண முடிகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகள் எனத் தோன்றுவதாக மெக்சிக்கோ அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இவா்கள் அனைவரும் எந்தெந்த நாடுகளைச் சோ்ந்தவர்கள் என்ற விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை என்றும் விபத்தில் சிக்கி தப்பிப்பிழைத்தவர்களில் சிலர் தாங்கள் கௌதமாலாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக மோரேனோ தெரிவித்தார்.

அளவுக்கு அதிகமானவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம்.  என சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனா கூறினார்.

விபத்துக்குள்ளான வாகத்தில்  குறைந்தது 107 குடியேற்றவாசிகள் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது எனவும் அவா் குறிப்பிட்டார்.

106987560 1639099482598 gettyimages 1237128571 AFP 9UD2XZ 1 தெற்கு மெக்சிக்கோவில் வாகன விபத்து- 53 அகதிகள் பலி, பலர் காயம்

இதேவேளை, வித்தில் சிக்கிய வாகனத்தில் கணக்கிடப்பட்டதை விட அதிகளவு புலம்பெயர்ந்தவர்கள் இருந்திருக்கலாம். குடிவரவு அதிகாரிகளால் தாங்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவர்கள் தப்பியோடியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கௌதமாலாவின் எல்லை அருகே உள்ள மெக்சிக்கோ பகுதியில் வைத்து புலம்பெயர்ந்தவர்கள் இந்தக் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மெக்சிகோவின் மத்திய மாநிலமான பியூப்லாவிற்கு அவர்களைக் கொண்டு சென்று இறக்கிவிட ஒவ்வொருவரிடமும் தலா 2,500 முதல் 3,500 அமெரிக்க டொலர்கள் வரை அறவிடப்பட்டதாக விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad தெற்கு மெக்சிக்கோவில் வாகன விபத்து- 53 அகதிகள் பலி, பலர் காயம்

Leave a Reply